இராக் எதிரொலி: நேபாளத்தில் மசூதி எரிப்பு
காத்மாண்டு:
இராக்கில் தீவிரவாதிகளால் 12 நேபாள தொழிலாளர்கள் கொலை செய்ததையடுத்து நேபாளத்தில்பெரும் வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் ஜுமா மசூதி தீ வைத்துஎரிக்கப்பட்டது. மேலும் கத்தார் ஏர்லைன்ஸ் அலுவலம், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குஆட்களை அனுப்பும் தனியார் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஆகியவையும்சூறையாடப்பட்டன.
எரிக்கப்பட்ட இந்த மசூதி தான் நேபாளத்திலேயே மிகப் பெரிய பள்ளிவாசலாகும். இதையடுத்துமதக் கலவரம் நேராமல் தடுக்க, காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் இரங்கல் அனுஷ்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த 12 வாலிபர்கள் ஜோர்டனைச் சேர்ந்த மார்னிங் ஸ்டார் என்ற நிறுவனத்துக்காகஇராக்கில் பணியாற்றச் சென்றனர்.
ஆகஸ்ட் 19ம் தேதி இரு கார்களில் ஜோர்டனில் இருந்து இராக்குக்குள் நுழைந்த இவர்களைஅன்சர்-அல் சுன்னா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
5 நாட்களுக்கு முன் இவர்களது வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள், நேபாள நாட்டினர்இராக்க்குக்கு வருவதை நேபாள் தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே இது போன்ற தடையை நேபாள் விதித்துள்ளது.
இந் நிலையில் அந்த 12 தொழிலாளர்களும் கொல்லப்பட்ட வீடியோவை தீவிரவாதிகள் நேற்றுவெளியிட்டனர்.
ஒருவரை தலையை வெட்டியும் மற்றவர்களையும் சுட்டும் கொன்றுள்ளனர் (முன்னதாக அனைவரும்தலையை வெட்டிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன).
அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், கொல்லப்பட்டு கிடப்பதையும் காட்டும் வீடியோவைதங்களது இணையத் தளத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து நேபாளத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் சாலைகளில்திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காத்மாண்டுவில் ஒரு பள்ளிவாசல்சூறையாடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதலும் நடந்து வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications