இராக்: இந்தியர்களை மீட்க தரப்பட்ட ரூ 4.5 கோடி
டெல்லி:
சுமார் ரூ. 4.5 கோடியை பிணையத் தொகையாகக் கொடுத்துத் தான் 3 இந்தியர்கள் உள்ளிட்ட 7பேரையும் இராக்கிய தீவிரவாதிகளிடம் இருந்து குவைத் நிறுவனம் மீட்டுள்ளது.
இராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த இந்த 7 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இத குறித்துஇவர்களை வேலைக்கு அமர்த்தி இராக்குக்கு அனுப்பி குவைத் நிறுவன செய்தித் தொடர்பாளர்கூறுகையில்,
இவர்களை விடுவிக்க ரூ. 4.5 கோடியை தீவிரவாதிகளுக்கு வழங்கினோம். அதே நேரத்தில்இராக்கில் இருந்து எங்களது லாரிகளைத் திரும்பப்பெற வேண்டும் என்ற தீவிரவாதிகளின்கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.
பிணைத் தொகை நான்கு கட்டமாக தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டது. பணம் தரப்பட்ட விஷயம்இந்திய அரசுக்கும் தெரியும். இந்தப் பணத்தில் ஒரு பங்கு சமரசம் பேசிய தூதருக்கும்கொடுக்கப்பட்டது என்றார்.
இதற்கிடையே விடுவிக்கப்பட்ட 3 இந்தியர்களான அந்தர்யாமி, சுக்தேவ் சிங் மற்றும் திலக்ராஜ்ஆகியோர் குவைத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியாதிரும்புவர் என வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.
பிரதமருக்கு கருணாநிதி பாராட்டு:
இந் நிலையில் 3 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுகதலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், இணை அமைச்சர் அகமது ஆகியோருக்குஅவர் இன்று அனுப்பிய வாழ்த்துத் தந்தியில், 3 மதிப்புமிக்க இந்திய உயிர்களை மீட்கஇடைவிடாமல் போராடிய தங்களுக்கு எனது நன்றிகள். மீட்பு முயற்சிகள் வெற்றிகரமாகமுடிந்ததற்குப் பாராட்டுக்கள் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications