பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான தமிழர்
காட்டுமன்னார்குடி:
பாகிஸ்தான் சிறையில் மூன்று ஆண்டுகளாக அடைபட்டுக் கிடந்த தமிழக வாலிபர் ரஜினி காந்த்விடுதலையாகி மீண்டும் வீடு திரும்பினார். தனது விடுதலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோதான் காரணம் என்கிறார் ரஜினிகாந்த்.
கடலூர் அருகே உள்ள காட்டுமன்னார்குடியைச் ரஜினிகாந்த் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.1996ம் ஆண்டு ஏஜென்ட் ஒருவர், லெபனான் நாட்டில் இவருக்கு வேலை வாங்கித் தந்தார்.
இதற்காக லெபனான் சென்றார். ஆனால், பேசியபடி சம்பளம் தராததால், அங்கிருந்து இவரும்பஞ்சாபை சேர்ந்த ஜெகஜீத் சிங் என்பவரும் இத்தாலிக்கு வேலைக்குச் செல்ல முயன்றுள்ளனர்.அதற்காக ஏஜென்டிடம் பணமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் இத்தாலிக்கு கப்பலில்அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வழியில் துருக்கி நாட்டு போலீசார் இவர்களைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளது. இந்தத் தகவலைஇந்தியத் தூதரகத்துக்கும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தியத் தூதரகம் மெளனமாகஇருந்துள்ளது. இதனால் இருவரையும் விடுவித்து அனுப்பியுள்ளனர் துருக்கி போலீசார். ஆனால்,பாஸ்போர்ட்களைத் தர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா திரும்பிவிடத் திட்டமிட்டு வேனில்கிளம்பியுள்ளனர் ரஜினி காந்தும் சிங்கும்.
ஈரானில் நுழைந்தவுடன் அந் நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களுடன் 20 பாகிஸ்தானியர்களையும் சிறையில் அடத்த ஈரான் போலீசார், பின்னர்அனைவரையும் விடுவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சென்ற இந்த இருவருக்கும் 20 பாகிஸ்தானியர்களும் பெருமளவில் உதவிசெய்துள்ளனர். இவர்களுக்கு புதிய பாஸ்போர்ட், விசா பெற்றுத் தர அங்குள்ள இந்தியத்தூதரகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்தத் தூதரகத்தில் தமிழக அதிகாரி ஒருவரும் இருந்துள்ளார். ஆனால், உண்மையை விளக்கிச்சொல்லியும் அந்த அதிகாரி உதவ முன் வரவில்லையாம். பிறகு ஒரு வழியாக ஊர் திரும்ப விசாவாங்கிக் கொண்டு குருத்வார் வழியாக ரயிலில் இந்தியா கிளம்பியுள்ளனர்.
ஆனால், வாகா எல்லையில் ரயிலில் சோதனை நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தஇருவரையும் பிடித்துச் சென்று லாகூர் சிறையில் அடைத்துள்ளனர். காரணம், இவர்களிடம்பாஸ்போர்ட் இல்லை என்பது.
லாகூர் சிறையில் இருந்தபடி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்கட்சிகளின் தலைவர்களுக்கு தொடர்ந்து இவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால்,எல்லாகடிதங்களம் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டன.
ரஜினிகாந்த்தின் குடும்பத்தினர் உள்துறைச் செயலாளராக இருந்த சையத் முனீர் ஹோதாவை அணுகிநிலைமையை விளக்கியும் அவர் மாமூல் வேலைகளில் தீவிரமாக இருந்துவிட்டு இவர்களை திருப்பிவிரட்டியுள்ளார்.
இதையடுத்து வேலூர் சிறையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிதனது நிலையை விளக்கியுள்ளார் ரஜினிகாந்த்.
இதைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத்துறை யஷ்வந்த் சின்ஹாஆகியோரின் கவனத்துக்கு இதை கடிதம் மூலம் கொண்டு சென்றுள்ளார் வைகோ.
அதன் பலனாக பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுநடத்தியுள்ளனர். இரு நாட்டு உறவையும் மேம்படுத்தும் வகையில் பரஸ்பரம் சில கைதிகளைவிடுவிப்பது என அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 19 இந்தியக் கைதிகளை பாகிஸ்தான் விடுதலை செய்ய அதில் ரஜினியும்,சிங்கும் இடம் பெற்றனர். அதே போல சில பாகிஸ்தானிய கைதிகளையும் இந்தியா விடுவித்துஅனுப்பியுள்ளது.
வாகா எல்லை வழியாக அழைத்து வரப்பட்ட ரஜினிகாந்துக்கு சில பஞ்சாபியர்கள் ஜாமீன் வழங்க,ஊர் திரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த்.
தனது விடுதலைக்கு வைகோவைத் தவிர வேறு யாருமே எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றுகூறும் ரஜினி, சிறையில் இருந்தாலும் எனக்காக பிரதமர் வரை பேசிய வைகோவை உயிருள்ளவரைமறக்க மாட்டேன் என்கிறார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications