ஜெயலட்சுமி: ஏ.டி.எஸ்.பி ஆறுமுகம் விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமி விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் குறித்துவிசாரணை நடத்த மதுரை மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தை உளவுப் பிரிவு போலீஸ் மூலமாக தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன்விசாரித்து வருகிறார். அவர் தந்து வரும் அறிக்கைகளின் அடிப்படையில் தான் பல போலீஸ்அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ஏ.எஸ்.பி. ஆறுமுகத்தை ராஜேந்திரன்நியமித்துள்ளார். ஆறுமுகம் உடனடியாக தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக அரவக்குறிச்சி சென்ற ஆறுமுகம், அந்த ஊரின் நகைக் கடை அதிபர்திருமூர்த்தியிடம் விசாரணை நடத்தினார். அரவக்குறிச்சியில் இன்ஸ்பெக்டராக இருந்தசுந்தரவடிவேலு ஜெயலட்சுமியுடன் தாகத செக்ஸ் உறவு வைத்திருந்தார்.
அப்போது திருமூர்த்தியின் நகைக் கடையில் 15 பவுன் நகைகளை ஜெயலட்சுமிக்கு வாங்கித்தந்துள்ளார் சுந்தரவடிவேலு. ஆனால், அதற்குரிய பணம் தரவில்லை. இந்த விவகாரம் குறித்துதிருமூர்த்தியிடம் ஆறுமுகம் விசாரணை நடத்தினார்.
கடந்த 7 ஆண்டுகளாக மதுரை, தேனி, திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூர் ஆகியமாவட்ட போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் ஜெயலட்சுமிதொடர்பு வைத்திருக்கிறார்.
இதில் 22 போலீசார், ஒரு அமைச்சரின் பிஏ ஆகியோரின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளஜெயலட்சுமி பிறரது பெயர்களை குறிப்பாக கோட்டை வட்டார அதிகாரிகள், அரசியல்முக்கியஸ்தர்கள் குறித்த விவரங்களை வெளியிடாமல் மூடி மறைத்துள்ளார்.
இதில் பெருமளவில் பண பேரம் நடந்துள்ளதாக கருதப்படுகிறது.
இந் நிலையில் கோவையில் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞர், மரக் கடைஅதிபர் ஆகியோர் மீதும் தனி விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் ரவிசங்கர், சண்முகம் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், காவலர் கண்ணன்,நகைக் கடை உரிமையாளர் முருகவேல், கார் டிரைவர் அழகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தலில் முக்கிய குற்றவாளியான இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமறைவாக இருப்பதுகுறிப்பிடத்தக்கது. அவரைக் கைது செய்ய சிவகாசியில் இருந்து தனிப் படை போலீசார் மதுரைவந்துள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications