தனியார் துறையில் இட ஒதுக்கீடு: ராமதாஸ் தீவிரம்
சென்னை:
தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்துக்கு தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எந்த நாட்டிலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை என்று தொழிலதிபர்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.இது தவறானது. 1965-ம் ஆண்டே அமெரிக்காவில் வேலையில் சமவாய்ப்பு அளிப்பதற்கான கமிஷன்நிறுவப்பட்டது.
இன, நிற வேறுபாடு இன்றி தொழில் தொடங்கி நடத்த அங்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒருகாலத்தில் இனத்தாலும், நிறத்தாலும் ஒதுக்கப்பட்டவர்கள் இப்போது தொழிலதிபர்களாக மாறியுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு தொழில்துறைக்கு வங்கிகள் மூலம் ரூ.6 லட்சம் கோடி கடன்வழங்கப்பட்டிருக்கிறது. இத் தொகையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது வெறும் ரூ.5,600 கோடிமட்டும்தான்.
இந் நிலையில் இந்தியா ஒளிர்வதாகவும், சமத்துவ சமுதாயம் அமைப்பதாகவும் பேசுகின்றோம். இக் கனவு நனவாகவேண்டுமானால் வேலையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்குத் தொழில் அதிபர்கள்ஒத்துழைக்க வேண்டும்.
அவர்கள் ஒத்துழைக்காவிட்டாலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடுத் திட்டத்தை மத்திய அரசு துணிந்துநிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்குத் துணை நிற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications