பொடா விஷயத்தில் நாடகம் நடக்கிறது: வைகோ
செஞ்சி - திண்டிவனம்:
தன் மீதான பொடா வழக்கில் நாடகம் நடப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
தனது மறுமலர்ச்சி நடைபயணத்தில் செஞ்சி வந்த அவர் விழுப்புரம் சாலையில் நடந்தபிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
இந்த மாவட்டத்தில் மட்டும் பல லட்சம் மக்களை வழியெங்கும் சந்தித்திருக்கிறேன். மணிக்கணக்காகநின்று எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். குறைகளை மனுக்களாகத் தருகிறார்கள். ஆனால் அதைத்தீர்க்கும் இடத்தில் நான் இல்லை.
என் மீதான பொடா வழக்கில் பெரிய நாடகம் நடக்கிறது. அதில் நீதிபதியை நான் குறை சொல்லமாட்டேன். நீதியை மதிக்கிறவன் நான். வழக்கு தொடர்ந்து நடக்கட்டும், மீண்டும் சிறை செல்லவும்நான் தயார். எதற்கும் பயப்பட மாட்டான் இந்த வைகோ.
சமீபத்தில் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான கடலூர் இளைஞர் ரஜினிகாந்த்,வைகோவால் தான் விடுதலையானேன் என்று கூறியிருக்கிறார். தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும்போராடுவேன்.
வழியெல்லாம் மக்களைப் பார்க்கிறபோது குடிநீர் இல்லை, பாசனத்துக்கு தண்ணீர் இல்லைஎன்கிறார்கள். இந்தக் குறையைப் போக்க முதலில் தென்னக நதிகளை இணைத்திட வேண்டும்.
எந்தக் கட்சியிலும் இல்லாத இளைஞர்களே.. வைகோ அழைக்கிறேன், என்னுடன் வாருங்கள்.இதுவரை அரசியலில் நுழையும் எண்ணமே இல்லாமல் இருக்கும் இளைஞர்களே என்னுடன்சேருங்கள். ஒரு ஒளி மிகுந்த தமிழகத்தை உருவாக்குவோம்.
ஜாதி கூடாது, போதை கூடாது என்று சொல்கிற இயக்கம் மதிமுக. என்னுடன் நடை பயணத்தில்வருகிற இந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை பீடி, சிகரெட்டில் இருந்து விடுவித்திருக்கிறேன்என்றார்.
முன்னதாக திண்டிவனத்தில் அவர் பேசுகையில், சேது சமுத்திரம் திட்டம் நிறைவேறப் போவதன்மூலம் அண்ணாவின் கனவு நிறைவேறப் போகிறது.
இந்தத் திட்டம் நிறைவேறக் கூடாது என பல சதிகளைச் செய்தது இலங்கை அரசு. அவர்களது கைக் கூலிகளும்டெல்லியில் இருந்தார்கள். இப்போது இந்தத் திட்டம் நிறைவேறப் போகிறது. அண்ணா கண்ட கனவு நனவாகப்போகிறது.
திண்டிவனத்தில் பேசினாலும் திருமங்கலத்தில் பேசினாலும் எனது பேச்சில் மாற்றம் இருக்காது. எத்தனைவழக்குகளை வேண்டுமானாலும் தமிழக அரசு போட்டுக் கொள்ளட்டும். நேற்றும், இன்றும், நாளையும் புலிகளைநான் ஆதரிப்பேன்.
அதிமுகவுடனும் பாஜகவுடனும் கூட்டணி வைத்தது தான் என் அரசியல் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சறுக்கல்கள்என்றார் வைகோ.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications