ஒலிம்பிக்ஸ்: ஊனமுற்ற வீரருக்கு ஜெ. உதவி
சென்னை:
ஏதென்ஸில் நடைபெறவுள்ள ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழக தடகளவீரர் ராஜரத்தினத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஏதென்ஸ் நகரில் நடைபெறவுள்ள 2004ம் ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் ராஜரத்தினம் கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கி உதவவேண்டும் என்று முதல்வருக்கு அவர் மனு அனுப்பியிருந்தார்.
மனுவைப் பரிசீலித்த ஜெயலலிதா, ராஜரத்தினத்திற்கு ரூ. 1லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதற்கானகாசோலையை இன்று ராஜரத்தினத்திடம் ஜெயலலிதா வழங்கினார்.
மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான முறையில் பங்கேற்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமைசேர்க்குமாறு ராஜரத்தினத்தை ஜெயலலிதா வாழ்த்தினார்.
இதற்கிடையே, தனது 3 மாத சம்பளமான ரூ. 30,000த்தை 3 திருக்கோவில்களுக்கு அன்னதானத் திட்டத்திற்காகஇன்று ஜெயலலிதா வழங்கினார்.
மே மாத சம்பளத்தை மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கும், ஜூன் மாதசம்பளத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கும், ஜூலை மாத சம்பளத்த திருப்பாதிபுலியூர் வீரஆஞ்சநேயர் கோவிலுக்கும் முதல்வர் வழங்கினார்.
இதற்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் நிர்வாக இணை ஆணையர்கள் பெற்றுக் கொண்டனர்.கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் திருக்கோவில் அன்னதானத்திட்டத்திற்கு ஜெயலலிதா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications