முஸ்லீம்கள் மக்கள் தொகை: சென்சசில் பெரும் குளறுபடி
டெல்லி:
முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து மத்திய கணக்கெடுப்பு வாரியம் வெளியிட்டவிவரம் தவறானது என்று தெரியவந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு சென்சசில் ஜம்மூ-காஷ்மீர்மக்கள் தொகையை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத கணக்கெடுப்பு வாரியம் 2001ம் ஆண்டுஅதையும் சேர்த்துள்ளது.
இதனால் திடீரென முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருமளவில் வளர்ச்சி அடைந்தைப் போன்றதோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஜம்மூ-காஷ்மீரில் 10,069,917மக்கள் தொகை உள்ளதாக சென்சஸ் கூறியுள்ளது. இதில் 95 சதவீதத்துக்கும் மேலானவர்கள்முஸ்லீம்கள்.
இந்த சுமார் 1 கோடி பேர் கடந்த சென்சசில் விடுபட்டுப் போனவர்களாவர்.
1991-2001ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி 20.3சதவீதம் என்றும் முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் 36 சதவீதம் என்றும் சென்ஸஸ் ரிப்போர்ட்டில்கூறப்பட்டுள்ளது.
இந்த ஜம்மூ- காஷ்மீர் மக்கள் தொகையை கணக்கில் எடுத்தால், முஸ்லீம்களின் மக்கள் தொகைவளர்ச்சி 29.3 சதவீதம் மட்டுமே என்பதும் தெரியவந்துள்ளது. இது 1991ம் ஆண்டில் 33சதவீதமாக இருந்தது.
அதே போல இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.3 சதவீதம் என்று 2001ம் ஆண்டுசென்சஸ் கூறுகிறது. ஆனால், அதன் புள்ளிவிவரங்களை தெளிவாக ஆராய்ந்தால் இது 19.9சதவீதம் தான் என்று தெரிய வருகிறது. இந்துக்களின் மக்கள் தொகை பெருக்க விகிதம்இஸ்லாமியர்களை விட வேகமாகவே குறைந்து வருகிறது.
மொத்தத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் இந்துக்களின் மக்கள் தொகைவளர்ச்சி விகிதமும் குறைந்து கொண்டு தான் வருகிறது என்றும் தெரியவருகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 80.5 சதவீதத்தினர் இந்துக்கள். முஸ்லீம்களின் சதவீதம்13.4. கிருதுவர்கள் 2.3 சதவீதம். சீக்கியர்கள் 1.9 சதவீதம், புத்த மதத்தினர் 0.8 சதவீதம், ஜைனமதத்தினர் 0.4 சதவீதமாகவும் மற்ற மதத்தினரின் விகிதம் 0.6 சதவீதமாகவும் உள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications