இலங்கை கடற்படை சுட்டதில் தமிழக மீனவர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையினர் சுட்டதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றுள்ளதால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ராமேஸ்வரத்திலிருந்து 424 இயந்திரப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அன்று இரவு அவர்கள்கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று இலங்கைக் கடற்படையினர் அங்கு விரைந்துவந்தனர்.

தமிழக மீனவர்களை நோக்கி இலங்கைக் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் நாகநாதன்என்ற மீனவரின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர் தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துக் கொண்டு சென்றனர். திரும்பி வந்தராமேஸ்வரம் மீனவர்கள் இந்த சம்பவம் குறித்து மீனவர் அமைப்புகளிடம் தகவல் கொடுத்தனர். இதனால்ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

காயமடைந்த நாகநாதனுக்கு மதுரை அர சு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இலங்கைபடையினரின் தாக்குதலுக்கு ராமேஸ்வரம் மீனவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+