பாலச்சந்தர் படத்திற்கு வசனம் எழுத தயார்: கருணாநிதி
சென்னை:
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் படத்திற்கு வசனம் எழுத ஆர்வமாக உள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
8 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் கதை, வசனத்தில் கண்ணம்மா என்ற புதிய படம் தயாராகஉள்ளது. இதன் தொடக்க விழா சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.
விழாவில் இயக்குனர் பாலச்சந்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். படப்பிடிப்பைகருணாநிதி துவக்கி வைத்துப் பேசினார். அவரது பேச்சு அவரின் மலரும் நினைவுகளாகஅமைந்திருந்தது. அதன் சாரம்:
54 ஆண்டுகளுக்குப் பிறகு ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்துள்ளேன். எனது ஆருயிர் நண்பர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்து, எனது வசனத்தில் உருவான படம் பராசக்தி. இங்குதான்எடுக்கப்பட்டது.
பராசக்தி படத்தின் வசனங்கள், காட்சிகள் இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அந்தப்படத்தில், பர்மாவில் யுத்தம் மூண்டதால் அங்கிருந்து தப்பியோடி, பஞ்சைப் பராரியாக தமிழகம்திரும்பி வருகிறான் குணசேகரன்.
அப்போது அவனது குடும்பம் சீர்குலைந்து, சிதறிப் போயுள்ளதைக் கண்டு கதறுகிறான்.குணசேகரனின் நிலையில்தான் இன்று தமிழ்த் திரையுலகம் உள்ளது.
பராசக்தியில் சீர்குலைந்த குடும்பம் கடைசியில் சீர் பெற்றதைப் போல, தமிழ்த் திரையுலகம்மீண்டும் சீர் பெறும் என்று நம்புகிறேன்.
அரசியல் களைப்பு, தொல்லை, துன்பம் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி உற்சாகம் பெற இங்கேவந்தேன். ஆனால், நீங்கள் உற்சாகமாக இல்லை. உங்கள் பிரச்சனைகளை அரசு தீர்க்க முன் வரவேண்டும்.
இயக்குனர் பாலச்சந்தர் இங்கே பேசும்போது, கலைஞர் வசனத்தில் ஒரு படம் கூட டைரக்ட் நான்செய்யவில்லையே என்று வருத்தப்பட்டார். அவருக்காக வசனம் எழுதித் தர நான் தயார். எனதுவசனத்தில் அவர் ஒரு படத்தை இயக்க வேண்டும். அவரது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
கண்ணம்மா நடத்தில் நடிக்கிறவர்கள் புதியவர்கள். ஆனால் திறமையானவர்கள். டிவி நாடகங்களில்நடித்து வரும் வெங்கட் (மெட்டி ஒலி நாயகன்), பிரேம் குமார் (அண்ணாமலை) ஆகியோரதுநடிப்பைப் பார்த்து வியந்து தான், நான் இதில் அவர்களை நடிக்க வைக்குமாறு பரிந்துரைத்தேன்.
படங்கள் எடுப்பதால் பெரிய நஷ்டம் ஏற்படுவதாக கூறினார்கள். அது தவறு. குறைந்த பட்ஜெட்டில்படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டம் வந்தாலும் பாதிப்பு இருக்காது.
ஒரு காலத்தில் 3, 4 பெரிய நடிகர்கள்தான் திரையுலகில் இருந்தனர். அவர்களை நம்பித்தான்திரையுலகமே இருந்தது. இப்போது அப்படி இல்லை, 30-40 நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள்.அனைவரும் கொடி கட்டிப் பறக்கிறார்கள் என்றார் கருணாநிதி.
விழா முடிவில் ஏவி.எம். ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின்நினைவிடத்தில் மலர் தூவி கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications