தோல்வியை நோக்கி அமெரிக்கா: அல்-கொய்தா
கெய்ரோ:
இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா பெரும் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக அல்-கொய்தா அறிவித்துள்ளது.
நியூயார்க்கில் செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூறும் வகையில் பின் லேடனின்வலதுகரமான அய்மான் அல்-ஜவாகிரி, அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள டேப்பில்கூறியுள்ளதாவது:
அல்-கொய்தாவை யாரும் முடக்கிவிட முடியாது. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காபெரும் தோல்வியை நோக்கி நடை போட்டுக் கொண்டுள்ளது.
இந்த நாடுகளில் இரு நெருப்புக் கோளங்களுக்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் சிக்கிக்கொண்டுள்ளன. தங்கள் போரை அமெரிக்கா தொடர்ந்தால், அதற்கு உயிரிழப்புக்கள் தான்தொடரும். போரை கைவிட்டு வெளியேறினால் படு தோல்வியை ஒப்புக் கொண்டதாகஅமைந்துவிடும். இதனால் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது அமெரிக்கா.
எப்படி இருந்தாலும் அமெரிக்காவுக்கு தோல்வி வெகு தூரத்தில் இல்லை. பாலஸ்தீனத்திலும்இராக்கிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களை அமெரிக்கா கைவிடாத வரை,அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு என்பதே இனிமேல் இருக்காது.
அரேபியாவையும் இஸ்லாமிய உலகையும் சிதைக்க அமெரிக்கா சதித் திட்டம் போட்டுள்ளது.எகிப்து, சூடானுக்கு எதிரான அமெரிக்க சதிகள் விரைவில் வெளியுலகுக்குத் தெரியும். சூடானில்டார்பர் பகுதியில் நடக்கும் போரைக் காரணமாக வைத்து அந் நாட்டு இஸ்லாமிய அரசை பழிவாங்கமுனைகிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதி மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. இங்குஅமெரிக்கப் படைகள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றன. குழியைத் தோண்டி அதில் பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பதுங்கு குழிகளை விட்டு வெளியே இழுக்க சுடுகிறோம்,தாக்குதல்களை நடத்துகிறோம், அவர்களது ஆயுத சப்ளையை துண்டிக்கிறோம்.
இதற்கு பதிலடி தர ஹெலிகாப்டர்களையும் விமானங்களையும் கொண்டு குண்டு போடுகிறார்கள்.இதனால் தூசி தான் கிளம்புமே தவிர, எங்களை அவர்களால் தாக்கவே முடியாது என்றுகிண்டலடிக்கும் தொனியில் அந்த டேப்பில் பேசியுள்ளார் அல்-ஜவாகிரி.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications