வருண பேதத்தை பரப்புவதே கீதை: கருணாநிதி
சென்னை:
வருண பேதத்தை பரப்புவதே பகவத் கீதை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் சமத்துவ முழக்கத்தை ஏற்ராத நூல் ஒன்று உண்டு. அது தான்பகவத் கீதை.
ஒருவன், தன் வருணத்துக்குரிய தொழிலைச் செய்வதே இனியது. நானே இந்த நால்வகை வருணங்களையும்உருவாக்கியவன் ஆவேன். என்று கிருஷ்ணன் உபதேசிப்பது தான் கீதை.
எனவே பகவத் கீதையை ஏற்றுக் கொண்டால், வருண பேதங்களையும், பிராமண, ஷத்ரிய, வைசிய, சூத்திர என்றசதுர் வர்ணங்களையும் ஏற்றுக் கொள்வதாகவே பொருள்.
சிறப்புகள் வேறுபடலாமே தவிர, பிறப்பு காரணமாக மனிதர்களைப் பிரித்துப் பார்க்க முடியாது, கூடாது என்றுசொல்வதே திருக்குறள்.
ஆக, கீதை என்று ஒரு நூல் இருக்கலாம். ஆனால், அது எமக்குரியதல்ல. அதில் கூறப்படும் அறிவுரைகளும் யாம்கடைபிடிப்பதற்கு ஏற்றதல்ல.
அந்த நூல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், பெரியார்-அண்ணா வழி வந்தவர்கள் திருக்குறளையேபின்பற்றினால் யாருக்கு நஷ்டம்? உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
அண்ணல் அம்பேத்கர் கீதையைப் பற்றி சொன்னதில் சில துளிகளைத் தான் எடுத்துக் காட்டினேன்? ஏன் சிலருக்குகோபம் வருகிறது?.
கீதையை பரப்புவோர் மீது பெரியார் மிகக் கடுமையான விமர்சனம் தொடுத்தார். நான் அந்த அளவுக்குக் கூடபோகவில்லை. கீதையைப் பரப்புவது பச்சை அயோக்கியத்தனம் என்றார் பெரியார். நான் அந்த அளவுக்கு கடும்தாக்குதல் தொடுக்கவில்லை. ஆனாலும் என் மீது பாய்கிறார்கள் சிலர். என் உருவ பொம்மையைகொளுத்துகிறார்கள்.
மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில கும்பல்களின் மதியூக தந்திரம் தான் இது என்பது தமிழ்நெஞ்சங்களுக்குத் தெரியும்.
உருவ பொம்மையை கொளுத்தினாலும் கொள்கையில் மாற மாட்டேன். என்றோ ஒரு நாள் இந்த உடலேஎரியுண்டோ, புதையுண்டோ போகப் போவது தானே?
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications