தடையை மீறுவோம்: மதிமுக அறிவிப்பு
சென்னை:
சென்னைக்குள் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்பட்டால் அதை மீறி நுழைவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை நகருக்குள் 20 பேருக்கு மேல் கூட்டமாகச் செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ள போலீசார், வெறும்20 பேருடன் வேண்டுமானால் வைகோ வரலாம் என்றும் ஆயிரக்கணக்கானோருடன் வந்தால் நடை பயணத்தைதடுப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் தாம்பரத்தில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
நான் தடைகளைத் தாண்டிப் போவேன். அதில் எனக்கு சுவாரஸ்யம். வீம்பும் வீறாப்பும் ஜெயலலிதாவுக்குமாத்திரமல்ல, எனக்கும் பிடிக்கும். இந்த நடை பயணம் சாதி, மதம் கடந்த அன்பை மக்களிடம் பெற்றுத்தந்துள்ளது. ஏழைகளின் வேதனை சுமந்து சென்னைக்குள் நுழையும் போடு தடை என்கிறார்கள்,
சம்பளம் வாங்காமல் வேலை பார்த்தும் வேலைக்காரன் இந்த வைகோ. சென்னையில் சாலையோரமாக நடந்துசெல்ல அனுமதி இல்லையா?. பளிங்கு மாளிகைக்காரர்களுக்கு நடப்பவனின் கஷ்டம் தெரியாது. உங்கள் அதிகாரதுஷ்பிரயோகத்தை என்னிடம் காட்ட வேண்டாம்.
அப்படியே தடை செய்தால், ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பு என்றார்.
இந் நிலையில் இன்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் அக் கட்சியின் சட்டத்துறைச்செயலாளர் தேவதாஸ் உள்ளிட்ட குழுவினர் சென்னை நகர கமிஷ்னர் நடராஜனை சந்தித்துப் பேசினர். ஒரு மணிநேரத்துக்கும் மேல் இச் சந்திப்பு நடந்தது.
இதன் பின் வெளியே வந்த எல்.கணேசன் நிருபர்களிடம் பேசுகையில்,
ஏற்கனவே 2,000 பேருடன் சென்னைக்குள் நடை பயணம் வர அனுமதிக்க வேண்டும் என்று வைகோ எழுதியகடிதத்தை மாநகர போலீசாரிடம் கொடுத்திருந்தோம். ஆனால், கடைசி நேரம் வரை பதிலே சொல்லாமல்இருந்துவிட்டு, இப்போது அனுமதிக்க முடியாது என்கின்றனர்.
மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் வரையிலும் மேலும் சில சாலைகளிலும் செல்லலாம்என்றும் மற்ற சாலைகளில் ஊர்வலம் செல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இது எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
ஆயிரக்கணக்கானோருடன் மதுரை, நெல்லை, திருச்சி என மூன்று மாநகர்களைக் கடந்து வந்திருக்கிறார் வைகோ.நடை பயணம் வந்த பாதையில் எந்த இடத்திலாவது, ஏதாவது ஒரு சிறு சலசலப்பாவது ஏற்பட்டதா? போக்குவரத்துபாதிக்கப்பட்டதா?
இதுவரை எப்படி வந்தோமோ அப்படித்தான் சென்னைக்குள்ளும் வருவோம். வழக்கமாக ஒரு அரசியல் கட்சிஊர்வலம் வந்தால் கடையை அடைத்துவிட்டு ஓடுவார்கள், குழந்தைகளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குஓடுவார்கள் பெற்றோர்.
ஆனால், வைகோ வந்த வழியெல்லாம் பெண்களும் குழந்தைகளும் கூடி நின்று தண்ணீர் தந்து வரவேற்றார்கள்.யாரும கடையை அடைக்கவில்லை. மதிமுக மற்ற கட்சி மாதிரி கிடையாது என்பதை போலீசாரிடம் விளக்கினேன்.
இதை முதல்வரிடமும் சொல்லச் சொன்னேன். நடை பயணத்துக்கு அனுமதி தர வேண்டும் என்பது எங்களதுதாழ்மையான கோரிக்கை.
இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அதை நிச்சயம் மீறுவோம். தண்டனையை ஏற்போம். நாங்கள் எதற்கும்தயார் என்றார் எல்.கணேசன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications