கோபால்: அரசின் மேல் முறையீடும் தள்ளுபடி
சென்னை:
பொடா வழக்கு ஆவணங்களை நக்கீரன் கோபாலுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வழங்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொடா சட்டத்தின் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள கோபாலுக்கு, அவர் மீதான பொடா வழக்குஆவணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பொடா மறு ஆய்வுக் குழு நீதிபதி சஹார்யாஉத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி சொக்கலிங்கம் அதை நேற்று காலை தள்ளுபடி செய்தார்.
இத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு சென்னை மேல் முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
ஆவணங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட பொடா மறு ஆய்வுக் குழுக்கு அதிகாரம் உள்ளது. தமிழகஅரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டால் அது சட்ட விதிமுறைகளை மீறுவதாகி விடும். வழக்கு விசாரணையின்போது தங்கள் தரப்பு வாதங்களை வலுவாக வைக்க, கோபால் தரப்பினருக்கு ஆவணங்கள் வழங்கப்படவேண்டியது அவசியம்.
ஏன் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பொடா மறு ஆய்வுக் குழுதெரிவிக்கவில்லை என்பதை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் தற்போதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிக்கை இல்லாமல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய முடியாது. எனவே, கோபால் மீதான வழக்குக்குஅடிப்படையே இல்லை என்று மறு ஆய்வுக் குழு முடிவெடுத்தால் அந்த முடிவும் மாநில அரசை கட்டுப்படுத்தும்.எனவே பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவுப்படி, கோபால், காமராஜ், ராமநாதன் ஆகியோருக்கு 15ம்தேதி (இன்று) பிற்பகல் இரண்டு மணிக்குள் ஆவணங்கள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications