தென் ஆப்ரிக்காவில் அப்துல் கலாம்
டர்பன்:
தென் ஆப்ரிக்கா சென்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு டர்பன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.
தான்சானியாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு கலாம் தென் ஆப்ரிக்கா சென்றார். டர்பன் விமானநிலையத்தில் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அதிபர் தபோ மெபெகிமற்றும் அந் நாட்டு உயர் அதிகாரிகள் கலாமை வரவேற்றனர்.
பின்னர் கேப்டவுனில் இந்தியத் தூதர் எஸ்.எஸ். முகர்ஜி வழங்கிய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாம்நிருபர்களிடம் பேசுகையில்,
ஐரோப்பிய நாடுகள் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒருவருடன் ஒருவர் போரிட்டு வந்தன. இன்று அவைஇணைந்து யூனியனை உருவாக்கியதோடு, ஒரே கரன்சியையும் பயன்படுத்தும் அளவுக்கு நெருங்கிவிட்டன. அதேபோல ஒருநாள் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பான நாடுகளாக மாறும்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, தீவிரவாதத்தை எதிர்ப்பது, இராக் போரின் விளைவுகள், தென்மண்டலநாடுகளிடையே ஒத்துழைப்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெறும் அமைதி முயற்சிகள் குறித்துகலாம், மெபெகியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளாக இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிகா ஆகியவை இணைந்துசெயல்படுவது குறித்தும் முக்கிய ஆலோசனை நடக்கவுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்திலும் இன்று கலாம் உரையாற்றுகிறார். 4 நாள் தென் ஆப்ரிக்க பயணத்தின்போது ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் கலாம் கலந்துரையாடுகிறார். தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவை சந்தித்துப் பேசுகிறார்.
மேலும் தென் ஆப்பிரிக்கா நகரான பீட்டர்மெரிட்ஸ்பெர்க் நகரில் மகாத்மா காந்தி ரெயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட இடத்தையும் பார்க்கிறார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியக்குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications