குடும்பக் கட்டுப்பாடு கட்டாயமாகாது: அன்புமணி
டெல்லி:
நாமிருவர் நமக்கிருவர் விழிப்புணர்வுத் திட்டம் அமலில் உள்ளதால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இதற்குமேலும் புதிய திட்டம் ஏதும் தேவையில்லை என மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறினார்.
இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து மத்தியக் கணக்கெடுப்பு வாரியம் வெளியிட்டபுள்ளிவிவரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அன்புமணி,
சிறுபான்மையினர் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும். சிறுபான்மை மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான விவாதம் கூட நடத்தலாம்.
அதே நேரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை யார் மீதும் திணிக்க மாட்டோம். இது அவர்களாகவே முன் வந்து செய்யவேண்டிய விஷயம். ஒரு குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற விழிப்புணர்வுத் திட்டம் அமலில் உள்ளது. அதைமேலும் தீவிரமாகப் பரப்புவோம்.
அதைவிட்டுவிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாக திணிக்கும் வேலைகளில் அரசு இறங்காது. சிறுகுடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது, அதிக குழந்தைகள் இருந்தால் சலுகைகளைப் பறிப்பது போன்றசெயல்கள் எல்லாம் உகந்தவை அல்ல.
விழிப்புணர்வு, பிரச்சாரம் மூலமாக சிறு குடும்பத்தின் அவசியத்தை உணர்த்த தேசிய அளவில் தீவிர முயற்சிகளைஎடுக்க உள்ளோம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications