திருப்பதி: நாளை பிரம்மோற்சவம்-20ல் கருட சேவை
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடைபெறஉள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை உற்சவம் வருகிற 20ம் தேதி இரவு 9மணிக்கு நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது ஏழுமலையானுக்கு ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரங்கள்மற்றும் பொருட்கள் சீர்வரிசையாக வழங்குவது வழக்கம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அப்போதைய ஆந்திர முதல்-வர் சந்திரபாபு நாயுடு கருடசேவையில்கலந்து கொள்வதற்காக திருப்பதியில் இருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றபோது மலைப்பாதையில்நக்சலைட்டுகள் வெடிகுண்டுகள் வைத்து கொல்ல முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர்தப்பினார்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மலைப்பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 20-ம் தேதி நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி திருப்பதி வருகிறார்.
இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் பிரதான கோபுரம் முன்பு முதன் முறையாக டிஜிட்டல் திரையில்விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
விழாவை முன்னிட்டு கோவில் உட்புற வளாகம் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்பட்டது. இன்று மாலை 7மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந் நிகழ்ச்சியில் சுவாமியின் தளபதியாகக்கருதப்படும் விஸ்வகேசவருக்கு சிறப்பு பூஜைகள் பின்னர் 4 மாடவீதிகளிலும் திருவீதிஉலா நடைபெறும்.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழ்நாட்டில் சில முக்கிய ஊர்களில் இருந்து தமிழக அரசு 95 சிறப்புபஸ்களை திருப்பதி வரை இயக்க உள்ளது. அதேபோன்று ஆந்திர அரசும் 95 சிறப்பு பஸ்களை தமிழகத்தில்இருந்து திருமலை வரை இயக்க உள்ளது.
திருப்பதி மற்றும் திருமலையில் அரசு பஸ் நிலையங்களில் போக்குவரத்து வசதிகள் குறித்து தமிழ் மற்றும்தெலுங்கில் விவரங்கள் தெரிவிக்க 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இத் தகவலை சித்தூர் வட்டார ஆந்திர மாநில போக்குவரத்து கழக மேலாளர் நாகராஜு கூறினார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications