சிபிஐ விசாரணைக்கு எதிராக காவல்துறை வழக்கு
மதுரை:
ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தென் மண்டல ஐஜி ராஜேந்திரன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
விஜயலட்சுமி வழக்கில் இதுவரை 84 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 20 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கைஎடுத்துவிட்டோம்,
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் நியதி புரியவில்லை. மாநில காவல்துறையின்உணர்வுகளை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காவல்துறையின் எந்த அதிகாரியையும் காப்பாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தவறு செய்யும் எந்தஅதிகாரி, போலீஸ்காரர் மீதும் கருணை காட்டப்பட மாட்டாது. ஏற்கனவே இந்த வழக்கில் சில அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில போலீசின் எந்த அறிக்கையையும் கோராமல் நேரஐயாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதுகாவல்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் செயலாகும்.நாட்டின் மிகச் சிறந்த காவல்துறையாக தமிழக போலீஸ்விளங்குகிறது.
இந்த வழக்கில் எங்கள் விசாரணை நடக்கும்போது, சிபிஐயும் விசாரணையில் இறங்கினால் தேவையில்லாதகுழப்பம் தான் ஏற்படும். வழக்கை மேலும் விரிவாக நடந்த வேண்டும் என்று நீங்கள் கருதினால், மூத்தஅதிகாரியைக் கொண்டும் விசாரிக்கவும்த் தயாராக இருக்கிறோம்.
எனவே சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஐஜி.
சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் தான் உத்தரவிட்டது என்பது நினைவுகூறத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications