சுயாட்சி: இலங்கை விவாதிக்க புலிகள் சம்மதம்
கொழும்பு:
![]() |
இலங்கையின் வட-கிழக்குப் பகுதியில் சுயாட்சி அதிகாரம் கோருவதில் இருந்து விடுதலைப் புலிகள் கொஞ்சம்இறங்கி வந்திருப்பதாகத் தெரிகிறது.
சுயாட்சி அதிகாரம் வழங்க முன் வந்தால் தான் இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சு நடத்துவோம் என்று புலிகள்நிபந்தனை விதித்து வந்தனர். இதை அதிபர் சந்திரிகா ஏற்க மறுத்து வருவதால் அமைதிப் பேச்சுவார்த்தைதொடங்குவதில் சிக்கல் தொடர்கிறது.
இந் நிலையில் தமிழ்நெட் செய்தித் தளத்துக்கு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் அளித்துள்ளபேட்டியில், சுயாட்சி அதிகாரம் குறித்து இலங்கை அரசுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.
அதே நேரத்தில் சுயாட்சி மறுப்பு திட்டங்களை முன் வைத்துக் கொண்டு அரசு பேச்சு நடத்த வரக் கூடாது என்றுகூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க, நார்வே எடுத்த தீவிர முயற்சிகளின் பலனாக சுயாட்சி குறித்து இலங்கைஅரசுடன் விவாதிக்க புலிகள் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, நார்வே சிறப்புத் தூதர் எரிக் சோல்ஹைம் இன்று தனது குழுவினருடன் கிளிநொச்சி வந்தார்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தமிழ்ச் செல்வன்,
பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை அரசிடம் இருந்து நார்வே குழு எந்தத் தகவலையும்கொண்டு வரவில்லை. அமைதிப் பேச்சு விஷயத்தில் இலங்கை அரசு ஒரு குரலில் பேசவில்லை.
மட்டக்களப்பில் இலங்கை ராணுவத்தின் உதவியுடன் செயல்படும் சில ஆயுதக் கும்பல்களின் நடமாட்டம் அமைதிஒப்பந்தத்துக்கு முரண்பாடானது என்றார்.













Click it and Unblock the Notifications