கோட்டையில் தேசியக் கொடியை எரித்த வாலிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலை கிடைக்காத வாலிபர் ஒருவர் விரக்தியில், தேசியக் கொடியை மண்ணெண்ணை ஊற்றி எரித்தார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர், திடீரென தான் வைத்திருந்த தேசியக் கொடியை கீழேபோட்டு மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் பாய்ந்து சென்று தீயை அணைத்து தேசியக் கொடியைக்காப்பாற்றினர். கொடியை எரிக்க முயன்ற செல்வராஜ் பிடித்துச் சென்றனர்.
தலைமைச் செயலகத்தில் அரசிடம் பலமுறை மனு கொடுத்தும், ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்ற விரக்திகாரணமாக இந்த செயலில் தான் ஈடுபட்டதாக போலீசாரிடம் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் தேசியக் கொடி எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications