கோத்தகிரியில் கம்ப்யூட்டர் தொழிற்சாலை: கருணாநிதி
ஊட்டி:
ஊட்டி கோத்தகிரியில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தொழிற்சாலை தொடங்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறனிடம் பரிந்துரைக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
ஊட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டே கண்ணம்மா படத்துக்கு கதை, வசனம் எழுதி வரும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி இந்துஸ்தான் பிலிம்ஸ் தொழிற்சாலையை மூட விட மாட்டோம். இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் பிரதமரிடம்பேசுவார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழக்க விட மாட்டோம். சமூக அக்கறையுடன் இந்தப் பிரச்சனையைஅணுக வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வோம்.
தமிழகத்தின் நிர்வாகம் குறித்து தன்னை பிரதமர் பாராட்டியதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் விசாரித்துப் பார்த்தேன்.பிரதமர் அப்படி பாராட்டவே இல்லை என்று தெரியவந்தது.
கூட்டணியில் மாற்றம் வரும் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். அவர் யாரையோ எதிர்பார்க்கிறார் என்று மட்டும் தெரிகிறது. எங்கள்கூட்டணி தொடரும். சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தான்.
ஜெயலட்சுமி விஷயத்தில் சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும். காவல்துறை அந்த அளவுக்கு கீழே போய்விட்டது.
கோத்தகிரியில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தொழிற்சாலை தொடங்கலாம் என்று சில தொழிலதிபர்கள் யோசனை சொன்னார்கள். வேலைவாய்ப்பை உருவாக்கும் நல்ல யோசனை அது. அந்தத் துறைக்கான அமைச்சர் தயாநிதி மாறனிடம் நிச்சயம் பரிந்துரைப்பேன். அவரைகோத்தகிரிக்கும் அனுப்பி வைக்கிறேன் என்றார் கருணாநிதி.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications