ஜெ.வை சந்திக்க நான் தயார்: இளங்கோவன்
கோபிசெட்டிப்பாளையம்:
தமிழக மக்களின் நன்மைக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா தயார் என்றால், அவரை சந்திக்க நானும் தயார்என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு பல முகங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். ஜெயலலிதா என்ற வேதாளம், முருங்கை மரத்தில்இருந்து இறங்கி வந்து விட்டது போல் தெரிகிறது. மீண்டும் அதே மரத்தில் ஏறாமல் இருந்தால் சரி.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, செயல்படாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை ஜெயலலிதா விமர்சனம் செய்தார். தற்போது சூப்பர்பிரதமர் என்று பாராட்டியுள்ளார். இந்த பாராட்டுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக மக்களின் நன்மைக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்க ஜெயலலிதா தயார் என்றால் நானும் அவரை சந்திக்க தயார்.
தமிழை செம்மொழியாக அறிவித்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
எம்.பி. தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து 27 பள்ளிகளுக்கு கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டவும், 36 இடங்களில் சமுதாய நலகூடங்கள் அமைக்கவும் ரூ.1.87 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளேன் என்று அவர் கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications