நாட்டாமங்கலம்: ஒரே வேட்பாளரும் மனு வாபஸ்
மதுரை:
மதுரை நாட்டாமங்கலம் தலித் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தஒரே வேட்பாளரும் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் அங்கு இந்த முறையும் தேர்தல் நடைபெறவில்லை.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாமங்கலம், கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஆகிய 3 பஞ்சாயத்துக்களின் தலைவர்பதவிகளும் தலித் சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டவை.
ஆனால் இந்தக் கிராமங்களில் அதிகம் வசிக்கும் தேவர் சமுதாயத்தினர், தங்களுக்குத் தலைவராக தலித் வகுப்பைச்சேர்ந்தவர்கள் வரக் கூடாது என்று கூறி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதனால் இந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் கடந்த பல ஆண்டுகளாக தலைவர் தேர்தல் உள்பட பஞ்சாயத்துஉறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்த முடியாத நிலை நிலவுகிறது.
ஜாதிரீதியிலான மிரட்டலையும் மீறி, வேட்பு மனு தாக்கல் செய்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெல்லும்தலித்களும் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந் நிலையில் தற்போது இந்த 3 பஞ்சாயத்துக்களுக்கும் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
ஆனால் நாட்டாமங்கலத்தில் மட்டும் ஒரே ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல்செய்திருந்தார். அவரது பெயர் சங்குமாயன். கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வேட்பு மனுவை அதிகாரிகள்பரிசீலித்ததில், மனு முறையாக இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் அதிகாரிகளுக்குப் புதிய குழப்பம்ஏற்பட்டது.
தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில், உறுப்பினர் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகஅறிவித்தால் சட்ட சிக்கல் ஏற்படுமே என்று அதிகாரிகள் குழம்பினர்.
இந் நிலையில் சங்கு மாயனே போட்டியிலிருந்து விலகுவதாக கூறி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications