ரயில்கள் குறித்த விவரம் பெற கால் சென்டர்கள்
திருவனந்தபுரம்:
பொது மக்களுக்கு ரயில்களில் ரிசர்வேசன் நிலை, வருகை, புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்கால் சென்டர்கள் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சரானதில் இருந்து உருப்படியான பல திட்டங்களை அறிவித்து எல்லோரையும் ஆச்சரியப்படவைத்து வருகிறார் லாலு. நம்ம பிகார் லாலு தானா இவர் என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஆளேமாறியிருக்கிறார்.
அந்த வகையில் அவரது புதிய திட்டம் தான் கால் சென்டர்கள்.
இன்று காலை கன்னியாகுமரியில் சூர்ய உதயத்தை குடும்பத்துடன் ரசித்துவிட்டு திருவனந்தபுரம் சென்ற லாலுநிருபர்களிடம் கூறியதாவது:
முதல் கட்டமாக அடுத்த மாதம் டெல்லி, பெங்களூர், பாட்னாவில் ரயில்வே கால்சென்டர்கள் அமைக்கப்படும்.ரயில்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அந்த மையங்களைத் தொடர்பு கொண்டு இலவசமாகப்பெறலாம்.
நாட்டின் அனைத்து முக்கிய புனிதத் தலங்களையும் வில்லேஜ் ஆன் வீல்ஸ் என்ற ரயில்கள் மூலம் இணைக்கஉள்ளோம். இதன்மூலம் ஏழைகள் புனித யாத்திரை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
ரயில்வேயில் வீணாகும் இரும்பை ஏலத்துக்கு எடுத்து மாபியா கும்பல்கள் இத்தனை ஆண்டுகளாக தின்று தீர்த்துவந்தன. இதனைத் தடுக்க அந்த ஏலத்தையே ரத்து செய்துவிட்டேன். இனி இரும்பை ரீ-சைக்கிள் செய்துரயில்வேயே உபயோகித்துக் கொள்ளும்.
ரயில்வேயை தனியாரிடம் விற்க பா.ஜ.க. தீவிரமாக முயன்றது. அந்த முயற்சியை நான் குழி தோண்டிப்புதைத்துவிட்டேன். நான் இந்த அமைச்சர் பொறுப்பைக் கூட விடுவேனே தவிர, இதை தனியாரிடம் ஒப்படைக்கஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றார் லாலு.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications