குஜராத்: கொத்தடிமைகளாக இருந்த 18 தமிழர்கள்
அரியலூர்:
குஜராத்தில் கொத்தடிமைகளாக இருந்த 18 தமிழர்கள், மத்திய அமைச்சர் ராஜாவின் தலையீட்டால்மீட்கப்பட்டுள்ளனர்.
அரியலூரை அடுத்த அறங்கோட்டை என்ற கிராமத்தை சேர்ந்த 18 விவசாயத் தொழிலாளர்களை சிலஏஜெண்டுகள் குஜராத்துக்கு வேலைக்கு அழைத்துச் சென்றனர். கடும் வறட்சியால் விவசாய வேலை ஏதும்இல்லாததால், அவர்களும் குஜராத்துக்குச் சென்றனர்.
கப்பலில் இருந்து தானியங்கள இறக்கும் வேலை என்று சொல்லி அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள், இவர்களைகட்டுமானப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். கட்டுமான வேலையோடு, மேலும் பல வேலைகளையும் இரவு, பகல்பார்க்காமல் கொடுத்துள்ளனர். 18 பேரையும் ஒரே அறையில் அடைத்துள்ளனர். வேலையை விட்டு விலகவும்விடாமல் கட்டாயமாக வேலை பார்க்க வைத்துள்ளனர்.
இதையடுத்து, இவர்களில் சிலர் தங்களது உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள்கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதை விளக்கி அழுதுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அறங்கோட்டைகிராமத்தினர், தங்கள் பகுதி எம்.பியான மத்திய அமைச்சர் ராஜாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையடுத்து குஜராத் அரசைத் தொடர்பு கொண்ட ராஜா 18 பேரையும் விடுவிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்துஅம் மாநில போலீசார் விரைந்து சென்று 18 பேரையும் மீட்டு, நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்குஅனுப்பி வைத்துள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications