அதிமுக கூட்டணி தேர்தலுடன் முடிந்தது: பாஜக
சென்னை:-
அதிமுக கூட்டணி தேர்தலுடன் முடிந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
காங்கிரஸ், -கம்யூனிஸ்ட்ட் கூட்டணி நீண்டநாள் நீடிக்காது. கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து அனுசரித்து சென்றால்தங்கள் முகங்களை இழப்பர். இதே நிலைதான் காங்கிரசுக்கும்.
தமிழகத்தில் தேர்தலுக்காக பாஜக கட்சியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சோனியா- மற்றும் மன்மோகன்சிங்கை ஜெயலலிதா புகழ்ந்ததால் பாஜகவை விட்டு விலகி சென்று விட்டார் என்று அர்த்தம் அல்ல. கூட்டணிஇருந்தால் தானே விலகுவதற்கு. மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்து விட்டது.
இதை இரு கட்சித் தலைமையும் தெளிவுபடுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிஎன்ற வகையில் அதிமுகவுடன் பாஜகவின் உறவு நீடிக்கிறது. தேர்தலின்போது கூட்டணி பற்றி பேசுவோம் என்றுகூறினார்.


Click it and Unblock the Notifications
