இஸ்லாமுக்கு மாற போவதாக தலித் கிராமம் மிரட்டல்
திருநெல்வேலி:
ஜாதிப் பெயரை சொல்லி கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை திட்டிய செங்கோட்டை வளர்ச்சி அதிகாரி கருப்பையாமீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்திற்குமாறப் போவதாக நெல்லை மாவட்டம் கற்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கெடு விதித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்டது கற்குடி கிராமம். முற்றிலும் தலித் மக்கள் உள்ளஇந்தக் கிராமத்திற்கு சமீபத்தில் வளர்ச்சி அதிகாரி கருப்பையா வந்திருந்தார். அப்போது பஞ்சாயத்து குறித்தஆய்வுப் பணி நடந்தது.
அந்த சமயத்தில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் சேகருக்கும், அதிகாரி கருப்பையாவுக்கும் இடையே வாய்த் தகராறுஏற்பட்டது. இதையடுத்து கருப்பையா மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் புகார் கொடுத்தனர்.
அதில், பஞ்சாயத்துத் தலைவர் சேகரை ஜாதிப் பெயரை சொல்லி அதிகாரி கருப்பையா திட்டியுள்ளார். இதுகுறித்துநடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லை.
மேலும், போலீஸாரும் அதிகாரிக்கு ஆதரவாக உள்ளனர். எங்களது கிராமப் பெண்களை மிரட்டியும்,அசிங்கமாகப் பேசியும் வருகின்றனர். எனவே அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால்கிராமத்தில் உள்ள 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இஸ்லாம் சமுதாயத்திற்கு மாறுவோம் என்பதைத்தெரிவித்துக் கொள்வதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்களுடன் மாவட்ட அதிகாரிகள் சமாதானம் பேசி வருகின்றனர். இதே செங்கோட்டைதாலுகாவுக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய மதமாற்றம்நடந்து இந்தியாவையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications