தமிழ் செம்மொழியானதில் மோசடி இல்லை: மணவை முஸ்தபா கருத்து
சென்னை:
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை. இந்தியாவிலேயே செம்மொழியாகஅறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான் என்று பிரபல தமிழறிஞர் மணவை முஸ்தபா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சமஸ்கிருதம், அரபி, பாலி, பாரசீகம் ஆகியவை செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இப்போது தமிழும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், செம்மொழிகள் பட்டியலில் தமிழ் மட்டுமே இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதுமொழியியலார்களிடையே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட பாலி, அரபி, சமஸ்கிருதம், பாரசீகம் ஆகியவற்றின் பட்டியலில்தமிழைச் சேர்க்காமல், அதை தனியாக இன்னொரு பிரிவின் (இரண்டாம் தர பட்டியல்) கீழ் செம்மொழியாஅறிவித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழறிஞரும் யுனெஸ்கோ கூரியர் ஆசிரியருமான மணவை முஸ்தபாவிடம் நமது செய்தியாளர்தொடர்பு கொண்டு கேட்டபோது,
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. சமஸ்கிருதம், பாலி, அரபி, பாரசீகம்போன்றவை செம்மொழிகளாக நீண்ட காலமாக கருதப்பட்டு மதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவைஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சரியாகச் சொன்னால், மத்திய அரசில் இதுவரை செம்மொழி என்ற கருத்துருவாக்கமே இல்லை.
தமிழ் மட்டுமே இப்போது முதன் முறையாக, அதிகாரப்பூர்வமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழைசெம்மொழியாக அறிவித்திருப்பதில் மோசடி எதுவும் இல்லை. இரண்டாம் தர செம்மொழியாக தமிழ்அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாது.
செம்மொழிகளுக்கான பட்டியலில்தான் தமிழும் இடம் பெற்றுள்ளது. இதில் முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல்என்ற வேறுபாடோ, பாகுபாடோ இல்லை.
உலக அளவில் உள்ள லத்தீன், சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகளின் வரிசையில்தான் தமிழும்வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்.
இதே கருத்தையே கவியரசு வைரமுத்துவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்திய அரசால் முதன்முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள மொழி தமிழ் தான்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications