அரசியலுக்கு முழுக்கில்லை: உமா பாரதி பல்டி
மதுரா:
மூவர்ணக் கொடி யாத்திரை முடிந்ததும் அரசியலிலிருந்து விலகுவேன் என்று மதுராவில் பேசிய பாஜக மூத்ததலைவர் உமா பாரதி, அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபரீதாபாதில் நடந்த கூட்டத்தில் தான் அவ்வாறு பேசவில்லைஎன்று மறுப்பு தெரிவித்தார்.
மதுராவில் உமா பாரதி பேசியதாவது:
விழிப்புணர்வு பிரசாரங்களை விட பதவி முக்கியமானது அல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாளுக்குநாள் அரசியிலில் தரம் தாழ்ந்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் சில நாள்கள் தியானம் செய்யவுள்ளேன். அரசியல் அல்லாத ஒரு யாத்திரையைத்தொடங்கவுள்ளேன். அரசியலிலிருந்து விலகினாலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தரும் பணியைத்தொடர்ந்து செய்வேன் என்றார்.
பின்னர் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஃபரீதாபாதில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அரசியலிலிருந்து விலகுவதாக நான் கூறவில்லை. இரண்டரை ஆண்டு பாரத யாத்திரை மேற்கொள்வதற்காககட்சித் தலைமையிடம் அனுமதி மட்டுமே கேட்டேன். அதற்காக நான் அரசியலிலிருந்து விலகுவதாகக்கருதக்கூடாது என்றார்.
பாஜக விளக்கம்:
தனது யாத்திரைக்கு பா.ஜ.கவிலேயே போதிய ஆதரவு கிடைக்காததால் உமா பாரதி வருத்தமடைந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த யாத்திரை மூலம் தனது தனிப்பட்ட ஆதரவைப் பெறுக்கிக் கொண்டு கட்சியின் தலைவர்பதவியைப் பிடிக்க உமா முயற்சிப்பதாக கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு கருதுகிறார்.
இதனால் உமாவின் யாத்திரைக்குச் செல்ல வேண்டாம் என கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் வாய்மொழிஉத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உமா பாரதியின் யாத்திரைக்கு கூட்டமே கூடவில்லை.
இது குறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
உமா பாரதியின் யாத்திரை முடிவடைந்து, டெல்லி வந்த பிறகு, இவ்விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன்அவர் ஆலோசனை நடத்துவார். கட்சி மீது உமா பாரதிக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அப்படி ஏதும் இருந்தால்மூத்த தலைவர்களைச் சந்திக்கும்போது தெரிவிக்கலாம் என்றார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications