3 ஆண்டுகளில் சேது சமுத்திரம் தயார்: பாலு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிவடைந்துவிடும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலுகூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
இத் திட்டத்துக்கான அனைத்துத் துறைகளின் அனுமதிகளையும் பெறும் வேலை துரிதமாக நடந்து வருகிறது. வரும் அக்டோபரில் திட்டஅறிக்கை தயாராகிவிடும். அதன் பிறகு மிக விரைவாகவே வேலையும் தொடங்கிவிடும்.
தொடங்கப்பட்ட நாளில் இருந்து 3 வருடங்களுக்குள் பணிகளை முடித்துவிட முடிவு செய்துள்ளோம்.
இத் திட்டத்தை நிறைவேற்ற தூத்துக்குடி துறைமுகம் சேது சமுத்திரக் கழகத்தைத் தொடங்கிவிட்டது. இந்தக் கழகத்துக்கு நாட்டின் அனைத்துமுக்கிய துறைமுகங்களும், மத்திய கப்பல்துறையும் நிதியை வழங்கி பங்குதாரர்களாவர்.
இந்தத் திட்டத்தைை இலங்கை அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. அதையும் மீறி இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் அனுமதியைபெற்றுள்ளது திமுக கூட்டணி.
இத் திட்டம் நிறைவேறினால் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் குறைந்துவிடும். இதனால் இத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல்கொழும்பு தடை போட்டு வந்தது. இது இந்தியாவின் 143 ஆண்டு கனவு. இது தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான திட்டம். அதை இலங்கைபுரிந்து கொள்ள வேண்டும்.
இத் திட்டத்துக்கு எதிராக மீனவர்களைத் தூண்டுவிட்டு போராட்டம் நடத்துவது சில சமூக விரோதிகள் தான். அவர்களை சமாளிப்போம்என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications