தமிழுக்கு வரும் வி.பி. சிங்கின் கவிதைகள்
சென்னை & திருச்சி:
முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் இந்திக் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த தமிழ்க் கவிதை நூலை திராவிடர் கழகம்வெளியிடவுள்ளது.
ஒரு துளி பூமி.. ஒரு துளி வானம் என்ற தலைப்பிலான இந்த நூல் வெளியீட்டு விழா இன்று திருச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணிதலைமையில் நடக்கிறது. நூலை குன்றக்குடி மடாதிபதியான பொன்னம்பல அடிகளார் வெளியிடுகிறார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளதமிழகம் வந்த சிங் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தேவையானவை தான். அதற்காக பொடா போன்ற சட்டத்தை வைத்துக் கொண்டுஅப்பாவிகளை தண்டிக்கப்படுவது தவறு. இதனால் பொடா ரத்து செய்யப்பட்டது சரிதான்.
அதே நேரத்தில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமைய வேண்டும்.
பொடவை பாஜக கொண்டு வந்தபோதே பலரும் எதிர்த்தோம். அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என அச்சம் தெரிவித்தோம். ஆனால்,அவர்கள் கேட்கவில்லை. இப்போது அச் சட்டத்தால் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளது நிஜம்.
தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதையும் பாசமும் உண்டு. இப்போது எனது கவிதைகளை திராவிடர் கழகம்தமிழாக்கம் செய்து வெளியிடுகிறது. இதன்மூலம் என் உள் மன ஓசைகளை தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல வாய்ப்புகிடைத்துள்ளது என்றார் சிங்.
பின்னர் விமானம் மூலம் திருச்சி வந்த சிங்,கே.கே. நகரில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications