குற்றாலம் நர்சிங் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு
திருநெல்வேலி:
குற்றாலத்தில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான பிரச்சினையைஅரசு அதிகாரிகள் குழு நேரடி விசாரணை நடத்தி, தீர்த்து வைத்தது.
குற்றாலத்தில் உள்ள தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் படிக்கும்மாணவிகளிடம் பாலியல் முறைகேடுகள் நடத்தப்படுவதாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுகொடுத்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குமாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி தென்காசி கோட்டாட்சியர் ராஜசேகர், சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் ஆண்டியப்பன்,துணை இயக்குநர்கள் அய்யனார், மனோகர் மற்றும் டி.எஸ்.பி. நடராஜன் ஆகியோர் அந்த நிறுவனத்திற்குச் சென்றுஅதன் இயக்குநர் கீதாவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் குழு முன்னிலையில் நிர்வாகத்திற்கும், மாணவர்கள் சார்பில் இந்திய மாணவர் சங்கபிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்த நிறுவனத்தில் தொடர்ந்து படிக்கவிரும்பாத மாணவ, மாணவிகளுக்கு வரும் 15ம் தேதிக்குள் சான்றிதழையும், அவர்கள் செலுத்திய கட்டணத்தில்சேர்க்கை கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை திருப்பி அளித்துவிடுவதாகவும் கல்லூரிநிர்வாகம் உறுதி அளித்தது. அதை ஏற்றுக் கொண்டு மொத்தமுள்ள 53 மாணவ, மாணவிகளில் 50 பேர் சான்றிதழ்பெற விருப்பம் தெரிவித்தனர்.
பாலியல் புகார் மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications