பெங்களூர்: எலெக்ட்ரானிக் சிட்டிக்கு புதிய பாலம்- பாலு
பெங்களூர்:
பெங்களூரின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், நகரின் மையப் பகுதியில்இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை 9 கி.மீ. தூரத்துக்கு மிக நீண்ட பாலம் அமைக்கப்படும் என மத்திய தரைவழிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.
சமீப காலமாக பெங்களூர் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது. ஆங்காங்கே,மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தாலும் நெரிசலை சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக சாப்ட்வேர் நிறுவனங்கள் பெருமளவில் அமைந்துள்ள கோரமங்களா, ஒசூர் ரோடு, பி.டி.எம். லே-அவுட்ஆகிய பகுதிகளை வாகனங்கள் கடக்க நெடு நேரம் ஆகிறது. இதனால் பெங்களூரில் இனி தங்களது புதியதிட்டங்களைத் தொடங்கப் போவதில்லை என பல முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் மிரட்டி வருகின்றன.
இந் நிலையில் நேற்று ஒசூர் ரோட்டில் நிலைமையை டி.ஆர். பாலுவே நேரடியாகப் பார்வையிட்டார்.எலெக்ட்ரானிக் சிட்டியில் ஆரம்பித்து நகரின் மையப் பகுதி வரை பல இடங்களில் அதிகாரிகளுடன் சோதனைநடத்திய பாலு, பல முன்னணி சாப்ட்வேர் நிறுவன அதிபர்களையும் சந்தித்தார்.
இன்று முதல்வர் தரம்சிங்கை சந்தித்த பாலு, இப்போதுள்ள நான்கு வழி ஒசூர் சாலையின் மேலேயே,எலெக்ட்ரானிக் சிட்டி வரை 9 கி.மீ. நீளத்துக்கு புதிய பாலம் கட்டித் தரத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இது குறித்து பாலு கூறுகையில்,
இந்தப் பாலத்தைக் கட்ட ரூ. 400 கோடி செலவாகும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனி அமைப்புஉருவாக்கப்படும். இந்தத் திட்டத்துக்குக்கான 33.3 சதவீத நிதியை எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள சாப்ட்வேர்நிறுவனங்களே முதலீடு செய்யும்.
மீதமுள்ள 66.7 சதவீத நிதியை மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறையும், மாநில அரசும் ஆளுக்குப் பாதியாகசெலவிடும்.
கட்டணம் செலுத்தி இந்தப் பாலத்தை பொது மக்கள் உபயோகிக்க வேண்டும்.
இந்தப் பணி குறித்த ஆய்வு அறிக்கை அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டுவிடும். அதன்பின்ஏப்ரல் 2ம் தேதியே அடிக்கல் நாட்டி, உடனடியாக பாலம் கட்டும் பணி தொடங்கப்படும்.
இரண்டு ஆண்டுகளில் பணி முடிவடைந்துவிடும் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications