திரைத் துறையினருக்கு ஜெயலலிதாவின் சலுகைகள்
சென்னை:
திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். மேலும் சினிமா படிப்பிடிப்புக்கான கட்டணத்தையும் அதிரடியாகக் குறைத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகினரை சில காலமாக சந்திக்காமல் இருந்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் பொதுஇடங்களில் சூட்டிங் நடத்துவதற்கன கட்டணத்தை உயர்த்தினார்.
இந் நிலையில் கடந்த வாரம் திருட்டு விசிடிக்கு எதிராக சென்னையில் ஊர்வலம் நடத்திய திரையுலகினர்முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து தமிழ்த் திரையுலகினருக்கு பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளார் ஜெயலலிதா.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருட்டு விசிடி தயாரிப்போருக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பிரயோகிப்பதற்கு வசதியாக விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
காபிரைட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காபிரைட் சட்டத்தை மீறி திருட்டு விசிடிதயாரிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50,000 முதல் ரூ.2 லட்சம் வரைஅபராதமும் விதிக்கப்படும்.
திருட்டு விசிடி ஒழிப்புக்காக இப்போதுள்ள 6 படைகளுடன் மேலும் 6 கூடுதல் படைகள் உருவாக்கப்படும். 100என்ற எண்ணுக்கு திருட்டு விசிடி பற்றி தகவல் சொன்னால் திருட்டு விசிடி பிரிவுக்கு தகவல் அனுப்பப்படும்.
அரசு பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் உரிமம் பெறாத திருட்டு விசிடி ஒளிபரப்ப தடைவிதிக்கப்படுகிறது. இதை மீறி பேருந்தில் திருட்டு விசிடி ஒளிபரப்பினால், சம்மந்தப்பட்ட பேருந்து உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றத்துக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும்.
திரைப்பட படப்பிடிப்புக்கான கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன. கல்லூரிகள், கொடைக்கானல் மற்றும் ஊட்டிஏரி, மருத்துவமனைகள், சரணாலயங்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள ரூ.50,000 கட்டணம் ரூ.10,000 ஆகக்குறைக்கப்படுகிறது.
மற்ற பொது இடங்களில் கட்டணம் ரூ.25,000லிருந்து ரூ.5,000 ஆக குறைக்கப்படுகிறது. ராஜாஜி அரங்கில்படப்பிடிப்புக்கான கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.25,000 ஆக குறைக்கப்படுகிறது.
சினிமா மீதான கேளிக்கை வரியும் குறைக்கப்படுகிறது. நகர்ப் பகுதிகளில் புதிய படங்கள் மீதான வரி 25சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும், பழைய படங்களுக்கு 10 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் ஒட்டுமொத்த கட்டணத்திலிருந்து 10 சதவீதம் மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.
குறைந்த பட்ஜெட் படங்களுக்கான மானியம் மீண்டும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடி செலவில்புதிய திட்டம் ஒன்று வகுக்கப்படும். 2003 ம் ஆண்டில் இருந்து இது அறிமுகப்படுத்தப்படும். இதன்படி 25பிரதிகளுக்கு மேற்படாமல் 3,000 மீட்டருக்கு மிகாத படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications