பண்ணையார் நினைவிடத்தில் பெர்னாண்டஸ்
திருச்செந்தூர்:
வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அஞ்சலிசெலுத்தினார். பண்ணையார் சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடார் சமுதாயத்தினடையே மிகப் பிரபலமாக இருந்த வெங்கடேச பண்ணையார், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவேலைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு சென்னையில் போலீஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது நினைவு நாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ளஅம்மன்புரம், மூலக்கரை கிராமத்தில் உள்ள பண்ணையார் நினைவிடத்தில் அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கின.
பிற்பகல் வரை பூஜைகள் தொடர்ந்தன. பின்னர் அவரது மனைவியும் திமுக எம்.பியுமான செல்வி தலைமையில்அன்னதானம் நடந்தது. பண்ணையார் தலைமை வகித்து வந்த அகில இந்திய நாடார் பேரவையைச் சேர்ந்தஏராளமானோர் மூலக்கரைக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மும்பை, பெங்களூரில் இருந்தும் பண்ணையாரின் ஆதரவாளர்களான ஆயிரக்கணக்கான இளைஞர்கள்வந்திருந்தனர். நடிகர் சரத்குமார், திருநெல்வேலி எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக வணிகர் சங்கப் பேரவைத்தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பிரமுகர்களும் பண்ணையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ்பெர்னாண்டஸும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பண்ணையார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பாக திமுகதலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இது தொடர்பான போராட்டம், கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதற்கு உதவ தேசிய ஜனநாயகக் கூட்டணிதயாராக உள்ளது என்றார் பெர்னாண்டஸ்.
பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது தான் நாடார் சமூக பிரதிநிதிகள், டெல்லி சென்று துணைப்பிரதமராக இருந்த அத்வானியைச் சந்தித்து பண்ணையார் சாவு குறித்து சிபிஐ விசாரணை கோரினர் என்பதுநினைவுகூறத்தக்கது.
ஆனால், நாடார் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்க அத்வானி முன் வரவில்லை. அப்போது பெர்னாண்டசும்இதைப் பற்றி கவலையும்படவில்லை.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications