சென்னை, விருதுநகர், ராமநாதபுரத்தில் இன்று மத்தியக் குழு ஆய்வு
சென்னை:
மத்திய விவசாயத் துறைச் செயலாளர் ஏ.கே.அகர்வால் தலைமையில் தமிழகம் வந்துள்ள மத்திய வறட்சி நிவாரணஆய்வுக் குழு மாநிலம் முழுவதும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இவர்கள் வந்த நேரம் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.
ஒரு குழு சென்னை நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் ஏரிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டது.
எட்டு பேர் கொண்ட இந்தக் குழுவினர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திவிட்டுபொதுப்பணித்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ள இந்தக் குழுவினர் இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களுக்கும் சென்று வறட்சி நிலை குறித்து ஆய்வு நடத்துகின்றனர்.
முதல் குழு இன்று சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம்ஆகிய ஏரிகளைப் பார்வையிடுகிறது. இக் குழுவினருடன் தமிழக வருவாய்த் துறைச் செயலர் சதாபதியும் உடன்சென்றார். முன்னதாக சாந்தோம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள மைலாப்பூர்-நந்தனம் குடிநீர் வினியோக நிலையத்தைப்பார்வையிட்டனர்.
பின்னர் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
வளர்ச்சித் துறைச் செயலாளர் வெங்கடேசன் தலைமையிலான இரண்டாவது குழுவினர் தமிழக வருவாய்த் துறைஆணையர் சந்தானத்துடன் இன்று காலை விருதுநகரில் வறட்சி நிலையைப் பார்வையிட்டது. பின்னர் ராமநாதபுரம்மாவட்டத்துக்குச் செல்கிறது.
நாளை மறுநாள் அகர்வால் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள்மற்றும் பாசனப் பகுதிகளைப் பார்வையிடுகின்றனர். வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடிமாவட்டத்துக்குச் சென்று வறட்சி நிலைமையை ஆய்வு செய்கின்றனர்.
வியாழக்கிழமை இரு குழுவினரும் தலைமைச் செயலகம் வந்து உயர் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனைநடத்திவிட்டு டெல்லி திரும்புகின்றனர்.
தமிழகத்தின் வறட்சி நிலைமையை சமாளிக்க ரூ.1,680 கோடி அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம்அண்மையில் முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இந்தக் குழுவினரை மத்தியஅரசு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications