நகராட்சித் தலைவர் தேர்தல்: அதிமுக முன்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராமநாதபுரம், திருமங்கலம் ஆகிய இரு நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுகமுன்னணியில் உள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இன்றுவாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மற்றும் திருமங்கலத்தில் தலைவர் பதவியை அதிமுக பிடிக்கும் என்று தெரிகிறது. இதுவரைஎண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் நகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில்திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

செங்கல்பட்டு, நாமக்கல், அம்பத்தூர், மீஞ்சூர், திருக்கழுக்குன்றம் ஆகிய நகராட்சிகளின் வார்டு கவுன்சிலர்பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ், அதிமுக ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. குமாரபாளையத்தில் அதிமுகவும்,கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியும் வார்டு இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

அதே போல வளசரவாக்கம் பஞ்சாயத்தின் 7வது வார்டுக்கு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவேட்பாளர் 307 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 247 வாக்குகளும் வென்ற நிலையில் அதிமுக வேட்பாளர்வெறும் 12 வாக்குகள் மட்டுமே பெற்று அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்தார்.

அம்பத்தூர் நகராட்சிக்கு வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.அதிமுக வேட்பாளரை 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வென்றார்.

செங்கல்பட்டு நகராட்சியின் வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நேற்று சென்னை மாநகராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடந்த வாக்குப்பதிவின்போது பெரும்வன்முறை மூண்டது.

ஏஜெண்டுகளை விரட்டிவிட்டு அதிமுகவினர் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி வாக்குகளை அள்ளி தங்களுக்குப்போட்டுக் கொண்டதாகவும், அங்கு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் திமுக கோரியது. ஆனால், அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த மோதலில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்துக் கிருஷ்ணன் கையில் அரிவாள் வெட்டுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை மருத்துவமனையில் சென்று பார்த்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின்,

அதிமுகவினருக்கு தோல்வி பயம். இதனால் ரெளடித்தனம் செய்தார்கள். அவர்களுக்கு ஏசி, டிசி என எல்லாமட்டத்தில் உள்ள போலீசாரும் உதவியாக இருந்தார்கள். வாக்குச் சாவடியைக் கைப்பற்றி அவர்களாகவேஅதிமுகவுக்கு ஓட்டு போட்டுக் கொண்டார்கள். பொது மக்களை ஓட்டு போட விடவில்லை. வாக்குச் சீட்டைபறித்துக் கொண்டு விரட்டியடித்துவிட்டார்கள்.

தேர்தல் கமிஷனுக்கு எந்த வேலையும் வைக்காமல் அவர்களே ஓட்டுப் போட்டுக் கொண்டனர். வாக்குஎண்ணிக்கையைக் கூட அவர்களே நடத்தி, முடிவையும் அவர்களாகவே அறிவித்துக் கொள்வார்கள். கலவரம்நடந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+