புலிகளுடன் தொடர்பு: தே.பா. சட்டத்தில் 4 பேர் கைது
ராமநாதபுரம்:
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இருவர் தேசிய பாதுகாப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல ராமேஸ்வரத்தில் இருந்து அகதிகளை கள்ளத்தோணிகளில் இலங்கைக்கு ஏற்றிச் சென்றதாக மேலும் இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமஸ்வரம் புதுரோட்டைச் சேர்ந்த ராஜா (42), போஸ் (48) இருவரும் ராமேஸ்வரம் பி.எஸ்.என்.எல்.தொலைபேசி டவரை குண்டு வைத்து தகர்க்க முயன்றதாகவும், விடுதலைப் புலிகளுக்கு பெட்ரோல், டீசலை கடத்திவந்ததாகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட எஸ்.பி. அசோக்குமார் தாஸ் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார்.இதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியில் செல்லமுத்து அவர்களை அச் சட்டத்தில் சிறையில் அடைக்கஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந் நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கை அகதிகளை கள்ளத்தனமாக அந் நாட்டுக்கு அனுப்பிவைத்ததாகவும், புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறி தலைமன்னாரைச் சேர்ந்த அலெக்சாண்டர் (22),சசி குமார் (26) ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர்.
இவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டார். இதையடுத்து இவர்களும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications