சட்ட கல்லூரி மாணவிகளிடம் ஆசிரியர்கள் சில்மிஷம்!
திருச்சி:
தங்களிடம் இரு பேராசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி திருச்சி சட்டக் கல்லூரி மாணவிகள்போராட்டம் நடத்தினர்.
திருச்சி காஜாமலையில் உள்ளது அரசு சட்டக் கல்லூரி. இங்கு ராகிங் குற்றச்சாட்டு தொடர்பாக சீனியர் மாணவர்கள்14 பேர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் ஸ்ரீதேவி, சிவகாமி ஆகியோர் இரு பேராசிரியர்கள் மீதுதிகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த இரு மாணவிகளையும் இரு பேராசிரியர்களும் தங்களது ஸ்டாப் ரூமுக்கு அழைத்ததாகவும், அங்கு வைத்துகன்னத்தைக் கிள்ளியும் கையைப் பிடித்து இழுத்தும் தவறாக நடந்து கொண்டதாக இந்த மாணவிகள்கூறியுள்ளனர்.
இது குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
என்னையும் சிவகாமியையும் ஸ்டாப் ரூமுக்கு அழைத்து ஆசிரியர்கள் இருவரும், நாங்கள் ஜூனியர்மாணவர்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளோம். இதை வைத்து ராகிங் செய்ததாக உங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என மிரட்டினர்.
பேசிக் கொண்டே இருந்தபோது ஒரு ஆசிரியர் என் கையைப் பிடித்து இழுத்தார். அவரது கையை நான் தட்டிவிட்டேன். உடனே என் கன்னத்தைத் தடவினார், கிள்ளினார்.
இதையடுத்து இருவரும் அறையை விட்டு வெளியேற முயன்றோம். ஆனால், வாசலில் வந்து நின்று ஆசிரியர்கள்வழி மறித்தனர். பின்னர் மாணவர், பிற மாணவிகளின் உதவியோடு தப்பி வந்தோம்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும்வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார்உதவி கமிஷ்னர் முத்தையா தலைமையில் அங்கு சென்று கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகளிடம்பேச்சு நடத்தினர்.
அப்போது, இந்தக் குற்றச்சாட்டு மாணவிகள் சம்பந்தப்பட்டது என்பதால் அதை அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார் விசாரிப்பர் என முத்தையா அறிவித்தார்.
அதே போல சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 சீனியர் மாணவர்களையும் மன்னித்து மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுமாறும் நிர்வாகத்திடம் முத்தையா கேட்டுக் கொண்டார். இதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
பேராசிரியர்கள் மீதான புகார் உண்மையானதா, அல்லது ராகிங் செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சீனியர்மாணவிகள் இருவரும், பேராசிரியர்கள் மீது பொய்யான புகாரைக் கூறியுள்ளார்களா என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவிகளிடம் ஆசிரியர்கள் செக்ஸ் சில்மிஷம் செய்வது புதிதல்ல என்றும், இந்தக் கல்லூரியில்பல ஆண்டுகளாகவே இந்தத் தொல்லை இருந்து வருவதாகவும், அரசு கடும் நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பல மாணவிகள் கூறுகின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications