யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகிறது ஊட்டி ரயில்
குன்னூர்:
ஊட்டி ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது.
நீலகிரி மலை ரயில் 1857ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீராவியால் இயக்கப்படும் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் ஆரம்பித்து கல்லூர், ஹில் குரோவ் ரயில்நிலையங்கள் வழியாக குன்னூர் செல்கிறது. அங்கிருந்து டீசல் என்ஜின் மாற்றப்பட்டு ஊட்டி வரை இயக்கப்படுறது.
நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஐநா சபையின் யுனெஸ்கோஅமைப்பு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து யுனெஸ்கோ அதிகாரிகளான ராபர்ட் லீ, அயர்ன் வாக்கர் ஆகியோர்இந்த ரயிலையும், ரயில் நிலையங்களையும் பார்வையிட குன்னூர் வந்தனர்.
அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த ரயிலில் குன்னூர்வந்த அவர்களுக்கு இந்த ரயிலின் சிறப்பு அம்சங்களை ரயில்வே அதிகாரிகள் விளக்கினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ராபர்ட் லீ,
இந்த ரயில் வரும் பாதையில் நாங்கள் கண்ட இயற்கைக் காட்சிகளை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. மலைமீதும், மேகங்களுக்கு மத்தியிலும் இந்த ரயில் புகுந்து விளையாடுகிறது. மனதை உற்சாகப்படுத்திக் கொள்ள இதுஒரு அற்புதமான வாய்ப்பு.
இந்த ரயிலின் பாரம்பரியம், வரலாறு ஆகியவை குறித்து விவரங்கள் திரட்டி யுனெஸ்கோவுக்கு அறிக்கைதருவோம் என்ார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications