தமிழகத்தில் அதிகம் பெய்த தென்மேற்கு பருவமழை
சென்னை:
தமிழகத்தை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த பருவ மழை இந்த ஆண்டில் அதிகமாகவே பெய்து பூமியோடுமனங்களையும் ஈரமாக்கியிருக்கிறது.
நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மீதி எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டைக்காட்டிலும் 7 சதவீதம் அதிக அளவு தென் மேற்குப் பருவமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பருவமழை தாமதமாகத் தொடங்கியது என்றாலும், கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்துவருகிறது. தென் மேற்குப் பருவமழை செப்டம்பரோடு முடிவடையும். ஆனால் இந்த வருடம் அக்டோபர் முதல்வாரம் முழுவதுமே மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த மழை காரணமாக மேட்டூரிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000கன அடியிலிருந்து 1,000 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைக்காலத்தில் குறைந்த அளவே மழையைப் பெறும் திருநெல்வேலி மாவட்டத்தில் கூட இந்தமுறை 121 சதவீதம் மழை பெய்துள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் 35 சதவீதமும், திருவள்ளூர்மாவட்டத்தில் 27 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 32 சதவீத மழை கிடைப்பது தென் மேற்குப் பருவக் காற்றின்போது தான்.
ஒரு பக்கம் மழையால் விவசாயிகள் மகிழ்ந்தாலும், இன்னொரு பக்கம் குறுவை நெல் சாகுபடியை இந்த மழைகெடுத்துவிட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி முடிவடைந்துவிட்டது. 14 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில்தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடைக்காகக் காத்திருக்கிறது. இந் நிலையில்மழை பெய்து வருவது, அறுவடை குறித்த கவலையை விவசாயிகளிடம் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ரங்கநாதன் கூறுகையில்,
சற்று ஈரப்பதத்துடன் கூடிய நெல்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவதற்கு அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். கடந்த 1999ல் ஈரப்பதமுள்ள நெல்லை வாங்க அரசு அறிவிப்பு வெளியிட்டதுபோல தற்போதும்உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனிடம் உள்ள நவீன அரிசி ஆலையில் நெல் உலர வைக்கும் வசதிஉள்ளதால், அங்கு ஈரப்பதமுள்ள நெல்லை உலர வைத்துக் கொள்ளலாம் என்றார்.
குறுவை சாகுபடி குறித்த கவலை விவசாயிகளிடம் இருந்தாலும் சம்பா சீசன் நன்றாக இருக்கும் என்றுநம்பிக்கையுடன் உள்ளனர். சம்பா நெல் விதைப்பு அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கும்.
தென் மேற்குப் பருவ மழை வழக்கத்தை விட 7 சதவீதம் அதிகமாக பெய்திருந்தபோதிலும், தமிழகத்தில்விளைச்சலை நிர்ணயிப்பது வட கிழக்குப் பருவமழை தான். அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னரே இந்த மழைதொடங்கும். இதுவும் நல்லபடியாகப் பெய்தால் வறட்சியின் கோரப்பிடியில் இருந்து தமிழகம் வெளியில்வந்துவிடும்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications