தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஜெ. எச்சரிக்கை
சென்னை:
பொதுமக்களிடமிருந்து பராமரிப்புக் கட்டணத்தை வசூலித்து விட்டு திரையரங்குகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால்சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
தமிழ் திரையுலகுக்கு சமீபத்தில் பல்வேறு சலுகைகளை ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, திரையரங்கு உரிமையாளர்கள் படம் பார்க்கவருபவர்களிடமிருந்து பராமரிப்புக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்பதும் ஒரு சலுகை.
இந்த சலுகைக்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பராமரிப்புக் கட்டணத்தால் டிக்கெட்கட்டணம் அதிகரிக்கும், மேலும், படம் பார்க்க வரும் ரசிகர்களிடமே திரையரங்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிப்பது நியாயமல்லஎன்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திரையரங்குகளில் தற்போதுள்ள டிக்கெட் கட்டணம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்பட மாட்டாது, திரையரங்கு உரிமையாளர்கள்டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது. திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதால் படம் பார்க்கவருவோரிடமிருந்து அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.
திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறிப்பட்ட கால இடைவெளியில் திரையரங்குகளுக்கு நேரில் சென்றுசுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, ரசிகர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும்.ரசிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பராமரிப்புக் கட்டணம் முறையாக செலவிடப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
திரைத்துறையினருக்கு சலுகை வழங்கப்பட்ட அதே நேரத்தில் பொதுமக்களின் நலனையும் அரசு கருத்தில் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டவிரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
குண்டர் சட்டத்தில் திருத்தம்:
இதற்கிடையே ஜெயலலிதா அறிவிப்புப்படி குண்டர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதன்படி திருட்டு விசிடி தயாரிப்பு, விநியோகம் ஆகிய குற்றங்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, திருட்டு விசிடி குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் மீது காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் இனி நடவடிக்கை எடுக்க முடியும்.இதற்கான உத்தரவை ஆளுநர் ராம்மோகன் ராவ் பிறப்பித்துள்ளார்.
மற்றொரு சட்டத் திருத்தத்தையும் ஆளுநர் அறிவித்துள்ளார். அதன்படி, வீடியோ கேசட்டுகள் மூலமாகவோ அல்லது கேபிள் டிவிமூலமாகவே புதிய படங்களையோ அல்லது அனுமதி பெறாத படங்களையோ பொது இடங்களில் ஒளிபரப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம்அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிப் பகுதிகளில் புதிய படங்களுக்கானகேளிக்கை வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதம், பழைய படங்களுக்கு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.பேரூராட்சி பகுதிகளில் 10 சதவீதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டு சட்டத் திருத்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications