சென்னை லாக்கப் சாவு: போலீஸ்காரர் பணிநீக்கம்
சென்னை:
சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்த பிரச்சினையில்,சம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்த காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் செல்போன் திருட்டு தொடர்பாக சாஸ்திரி நகர்காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அவர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அடுத்த நாள் காலையில்,செந்தில்குமார் தான் அணிந்திருந்த ஜட்டியின் நாடா மூலம் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டதாகபோலீஸார், செந்தில்குமாரின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமாரின் உறவினர்கள் பெசன்ட் நகர் பஸ் நிலையம் பகுதியில் கூடிஆர்பாட்டம் செய்தனர். செந்தில்குமாரை போலீஸார்தான் அடித்துக் கொன்று விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந் நிலையில் சம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்த காவலர் கோதண்டபாணி என்பவரை தற்காலிக பணிநீக்கம்செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications