சேது திட்டத்திற்கு இலங்கை இடைஞ்சல்: வைகோ
மதுரை:
சேது சமுத்திர திட்டத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில்தாமதம் நிலவுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரம் திட்டத்தினால் தமிழகம் மட்டுமல்லாதுஇந்தியாவுக்கே பெரும் பயன் விளையும்.
ஆனால், இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுகிறது.
திட்டக் குழுவில் வெளிநாட்டு ஆலோசகர்கள் இடம் பெறுவதற்கு இடது சாரிக் கட்சிகள் தெரிவித்துள்ள எதிர்ப்புநியாயமானதுதான். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா மாதிரியான வளரும் நாடுகள் மீது தங்களதுகொள்கைகள், தயாரிப்புகளை திணிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும்.
எனவே, திட்டக் குழு ஆலோசனைக் குழுக்களில் வெளிநாட்டு வாடை இருக்கக் கூடாது என்ற கோரிக்கைதவறில்லை. முரசொலி மாறனே கூட தோஹா மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்துள்ளார்என்றார் வைகோ.
பிபிசி டிவிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில், நியூமரலாஜிப்படி வைகோ தனது பெயரை சுருக்கிக் கொண்டதாககூறியது குறித்த ஒரு கேள்விக்கு, எனது பெயரை நியூமரலாஜிப்படி சுருக்கவில்லை. வை.கோபால்சாமி என்று எனதுபெயர் இருந்தபோதே திமுகவினரும் மற்றவர்களும் வைகோ என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்.
கூப்பிடுவதற்கு எளிதாக இருக்கிறதே என்பதற்காக அப்படி அழைத்தனர். இதைத் தொடர்ந்துதான் எனது பெயரைவைகோ என்று மாற்றிக் கொண்டேன் என்றார் வைகோ.
சோ.பாவிடம் நலம் விசாரிப்பு:விபத்தில் காயமடைந்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் காங்கிரஸ்தலைவர் சோ.பாலகிருஷ்ணனை வைகோ நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications