கருணாநிதியும் இந்தியும்: அதிமுக தாக்கு
வேலூர்:
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகிவிட்டதால் இந்திக்கு நான் விரோதியில்லை என்று கருணாநிதி கூறஆரம்பித்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் அதிமுக ஆட்சியின் 3 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நடந்த பொதுக்கூட்டத்தில் வக்பு வாரியத் தலைவரும் அதிமுக சார்பில் தென் சென்னையில் போட்டியிட்டுத் தோற்றவருமான பதர்சயீத் பேசியதாவது:
தனது பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகி, இந்தியில் பேச வேண்டிய சூழலில் இருப்பதால், இந்திக்கு நான்விரோதியில்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார் கருணாநிதி.
போன தேர்தலில் 7 கட்சிகள் சேர்ந்து திமுகவை ஜெயிக்க வைத்தன. அதில் ஒன்று கழன்றாலும் அதிமுகவிடம் திமுகதோற்கும். வரும் தேர்தலுக்குள் அது தான் நடக்கப் போகிறது.
எல்லா கட்சிகளிலுமே சிறுபான்மைப் பிரிவு உள்ளது. ஆனால், திமுகவில் அது இல்லை. திமுக ஆட்சியில் தான்அதிமான முஸ்லீம்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அதிமுக ஆட்சியில் தர்ஹாவில் கூட அன்னதானம்வழங்கி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
துணை வேந்தராக, தேர்வு வாரியத் தலைவராக முஸ்லீம்களை நியமித்தது ஜெயலலிதா தான். முஸ்லீம்கள்பாதுகாப்பாக இருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியில் தான். நாட்டிலேயே முதன்முதலாக மதுபான கடைகளைத்திறந்தவர் கருணாநிதி தான். ராஜாஜியும் காய்தே மில்லத்தும் எவ்வளவோ தடுத்தும் கடைகளைத் திறந்தார் என்றார்சயீத்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications