தீவிரவாத தாக்குதல்கள்: அஸ்ஸாமில் பந்த்
கெளஹாத்தி:
நாகாலந்திலும் அஸ்ஸாமிலும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. கடந்த இரு தினங்களில்60க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்துள்ள இந்தத் தாக்குதல்களால் இரு மாநிலங்களும் இயல்பு நிலையைஇழந்து தவிக்கின்றன.
நேற்றிரவு அஸ்ஸாமின் சோந்திபூர் மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி கண்மூடித்தனமாக சுட்டதில் 6 பேர்பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அஸ்ஸாமில் நடந்த அனைத்துத் தாக்குதல்களுக்கும் உல்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மத்தியஅரசு தங்களுடன் அமைதிப் பேச்சு நடத்த முன் வர வேண்டும் என்றும், மாநில அரசுடன் பேச்சு நடத்த மாட்டோம்என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந் நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அஸ்ஸாமில் இன்று பந்த் நடக்கிறது. இதனால்மாநிலம் முழுவதும் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள்மூடப்பட்டுள்ளன. போடோ மாணவர்கள் சங்கம் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி என்ற (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு தான்இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே நாகாலாந்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் இன்று அஸ்ஸாமில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த இடங்களைப் பார்வையிட்டார்.
அஸ்ஸாமிலும் பிற வட கிழக்கு மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளுக்கு வங்கதேசமும்,மியான்மாரும் முழு உதவி அளித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் அங்குள்ள தீவிரவாத முகாம்களை இந்தியாதாக்கி அழிக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் தருன்கோகோய் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகா தீவிரவாத அமைப்பினருடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை விரும்பாதபோடோ தீவிரவாதிகள், அந்தப் பேச்சுவார்த்தையைக் குலைக்கவே நாகாலாந்தில் தாக்குதல்கள் நடத்தி வருவதாகஅம் மாநில முதல்வர் நெய்பியூ ரியோ தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இன்று துப்பாக்கி குண்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications