வாசன் மீது இளங்கோவன் ஆதரவாளர்கள் சரமாரி புகார்
பாண்டிச்சேரி:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் செயல்பாடுகள் கட்சியை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதாகமத்திய அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்களான 10 மாவட்ட தலைவர்கள் கட்சி மேலிடப் பிரதிநிதியிடம்சரமாரியாக புகார் கூறியுள்ளனர்.
மதுரை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சமீபத்தில் வாசனுக்கு எதிராகஅறிக்கை விட்டனர். மதுரையில் மேலிடப் பிரதிநிதி சல்மான் குர்ஷித் முன்னிலையில் நடந்த கூட்டத்தின்போதுவாசனுக்கு எதிராக பகிரங்கமாக புகார்களையும் தெரிவித்தனர்.
இதையடுத்து மதுரை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி (மேற்கு), விருதுநகர், சேலம், தென் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு ஜி.கே.வாசன் நோட்டீஸ்அனுப்பினார்.
இந் நிலையில் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியான கே.பி.கிருஷ்ணமூர்த்தி புதுச்சேரிக்கு வந்திருந்தார். அப்போதுதன்னை வந்து சந்தித்து குறைகளைக் கூறும்படி மேற்கண்ட 10 தலைவர்களுக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து விளக்க நோட்டீஸ் அளிக்கப்பட்ட பொன். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அழகிரிஉள்ளிட்டோர் தலைமையில் இளங்கோவன் ஆதரவாளர்கள் புதுவை சென்று மேலிடப் பிரதிநிதியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, வாசன் மீது சரமாரியான புகார்களை அவர்கள் தெரிவித்தனர். கட்சியின் வளர்ச்சி குறித்துவாசன் அக்கறை காட்டுவதே இல்லை, கட்சியை அழிவுப் பாதைக்கு அவர் கொண்டு செல்வதாக அவர்கள் புகார்தெரிவித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications