சென்னை டெஸ்ட்: ஒரே நாளில் ரூ. 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை
சென்னை & பெங்களூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் 14-ம் தேதி தொடங்கும் 2-வது கிரிக்கெட்டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்கள் மிக வேகமாக விற்பனையாகி வருகின்றன. நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.15லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
டிக்கெட் வாங்க மழையிலும் ரசிகர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி (புதன்கிழமை) பெங்களூரில்தொடங்குகிறது. இரண்டாவது போட்டி சென்னையில் வரும் 14ம் தேதி ஆரம்பாகிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. விற்பனை தொடங்குவதற்கு பல மணிநேரத்துக்கு முன்னதாகவே ரசிகர்கள் ஆவலுடன் வரிசையில் காத்திருந்தனர். ஒரே நாளில் ரூ. 14.5 லட்சத்துக்குடிக்கெட்டுகள் விற்பனை ஆகின. ரூ. 200 முதல் 8 ஆயிரம் வரையிலான டிக்கெட்டுகள் தினமும் காலை 9 முதல் 1மணி வரையிலும், பகல் 3 முதல் 6 மணி வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைனிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. www.tnca.ccமற்றும் www.tamilnaducricketassociation.com ஆகிய இணைய தளங்கள் மூலம் டிக்கெட்களை முன் பதிவுசெய்து கொள்ளலாம்.
டிக்கெட்டை பதிவு செய்தவர்கள் 24 மணி நேரத்துக்குள், பதிவு செய்தற்கு அத்தாட்சியாக பிரிண்ட் அவுட்டைகொண்டு வந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆன்லைன் டிக்கெட்டை வாங்க சிறப்பு கெளண்டர்கள்திறக்கப்பட்டுள்ளன.
பதானுக்கு வார்னே பாராட்டு:
இந் நிலையில், இந்திய வீரர்களில் இர்ஃபான் பதான் அபாரமாக பந்து வீசுவதாக ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர்ஷேன் வார்னே கூறினார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளேன். இம்முறை எங்கள் டீம் பேட்ஸ்மென்கள்சிறப்பாக விளையாடுவார்கள். சுழல் பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையே நடைபெறும்போட்டியாக இது இருக்கும்.
இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் மீது எங்கள் பேட்ஸ்மென்கள்ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்தியப் பந்து வீச்சாளர்களில் இர்ஃபான் பதான் அபாரமான பந்து வீச்சாளர். அவரைச்சமாளிப்பதுதான் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்களுக்கு கடினமாக இருக்கும்.
எங்கள் அணியில் கேப்டன் ரிக்கி பாண்டிங் இல்லாதது பெரிய இழப்பு.
முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவருடன் நான்பேசினேன். மைதானத்துக்கு வெளியே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால்அவரை ஆட்டமிழக்கச் செய்ய கடும் முயற்சி செய்வேன் என்றார் வார்னே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications