ஜெயலட்சுமி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்
சென்னை:
ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல் முறையீடு செய்துள்ளது.
காவல்துறையினர் ஜெயலட்சுமி இடையிலான செக்ஸ், பணத் தொடர்புகன் குறித்து சிபிஐ விசாரிக்க மதுரைஉயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ஜெயலட்சுமியை போலீஸார் கடத்திச் சென்றதாக அவரது தந்தைஅழகிரிசாமி கூறிய புகாரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு தமிழக காவல்துறை வட்டாரத்திலும், அரசு மட்டத்திலும் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றுகாவல்துறை உயர் அதிகாரிகளும், மூத்த அரசு வழக்கறிஞர்களும் வலியுறுத்தினர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், அதிமுக எம்.பியும் வழக்கறிஞரான ஜோதி, டெல்லிவிரைந்தார். அங்கு மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நாகேஸ்வரராவே உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு மனுவுக்கும் தமிழக அரசின் சார்பில்ஆஜராகவுள்ளார்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தால், ஜெயலட்சுமியால்வழக்கறிஞர் வைத்து டெல்லி சென்று வழக்கை நடத்த முடியாது என்று அவரது வழக்கறிஞர் அழகர்சாமி கவலைதெரிவித்துள்ளார்.
மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால், தமிழக அரசின் இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதைத் தவிரஜெயலட்சுமிக்கு வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications