தண்டவாளத்தில் குப்பை போட்டால் அபராதம்: லாலு
பாட்னா:
ரயில்வே வளாகங்களிலும் தண்டவாளத்திலும் குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
பாட்னாவில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்து அவர் பேசுகையில்,
ரயில்வேயில் பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ரயில்வேநிலைய வளாகத்தில் குப்பைகளை வீசுவோர், தண்டவாள பகுதிகளில் சிறுநீர் கழிப்பது, காலைக் கடன் கழிப்பதுபோன்றவற்றில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
ரயில்களில் ஓசிப்பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அடிக்கடி டிக்கெட் பரிசோதனை நடத்தப்படும்.
ரிசர்வேஷன் செய்த பெட்டிகளில் மற்ற பயணிகள் அத்துமீறி ஏறுவதால் அந்த பெட்டிகளில் கூட்ட நெரிசல்ஏற்படுகிறது. இது போன்ற செயல்களுக்கு அனுமதி கிடையாது.
பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணத்தை உயர்த்தாமலேயே வருமானத்தை பெருக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. மாஃபியா சக்திகள் மூலமாக ரயில்வே ஒப்பந்தங்களை கைப்பற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு முடிவுகட்டப்பட்டு விட்டது என்று கூறினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications